சூர்யா என்னை மிரட்டுகிறார்: இளம் இயக்குனர்

சூர்யா என்னை மிரட்டுகிறார்…. இப்படியொரு இயக்குனர் பிரஸ்மீட்டில் கொந்தளித்தால் எப்படியிருக்கும்? கொந்தளித்தார் ஒருவர்.

சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனரான எஸ்.எம்.ராஜாதான் அவர். பொதுவாக ஒரு படத்திற்கு தலைப்பு வைக்கப்படும் போது அது யாரையாவது காயப்படுத்தாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயற்கைதான். அழகிரி என்ற படத்தின் தலைப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களால் பழம்பெரும் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரிக்கு இழுக்காகலாம். அல்லது மதுரை மாவீரனுக்கு கோபம் ஏற்படுத்தலாம். எதற்கு இந்த வம்பு என்பதால்தான் இந்த கட்டுப்பாடுகள்.

ஆனால் ‘சரவணன் என்கிற சூர்யா’ தலைப்புக்கு அனுமதி கிடைத்து படத்தையும் எடுத்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் தலைப்பை மாற்றச் சொல்லி நடிகர் சூர்யா மிரட்டுவதாக குறைபட்டுக் கொண்டார் எஸ்.எம்.ராஜா. ஆனால் ‘இவங்க பேமிலி மட்டும் அலெக்ஸ் பாண்டியன் என்று ரஜினியின் கேரக்டரை மாசு படுத்தலாம். நான் இப்படி ஒரு தலைப்பில் படம் எடுக்கக் கூடாதா?’ என்று பொங்கினார் இந்த பிரஸ்மீட்டில்.

‘எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் தலைப்பை மாற்ற மாட்டேன். நேரடியாகவும் மறைமுகமாவும் எனக்கு மிரட்டல் விடுத்த சூர்யாவுக்கு இந்த படத்தை போட்டுக் காட்டவும் நான் தயார். அவரது சொந்த விஷயங்களை நான் இதில் சொல்லியிருந்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்’ என்றும் சவால் விடுகிறார் அவர்.

படம் வெளியாகிற வரைக்கும் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வராது போலிருக்கே?

Read more...
Share |

சூர்யா - லிங்குசாமி படத்தின் தலைப்பு

சிங்கம் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி இயக்கிவரும் புதிய படமொன்றில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு இதுவரை
பெயரிடப்படாத நிலையில், தற்பொழுது ராஜூ பாய் அல்லது மன்னார் என்று பெயரிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது
மும்பையில் நடைபெற்று வருகிறது. சமந்தா இப்படத்தின் ஹீரோயினாக நடித்துவருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தின் ஒரு பாடல்காட்சிக்காக சுமார் 80 லட்சம் செலவில் பிரம்மாண்ட செட் அமைத்துப் படமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்குப் பிற்கு சூர்யா வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் டைட்டிலுக்காக சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதால் விரைவில் இப்படத்தின் டைட்டில் முடிவு செய்யப்படுமென
எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...
Share |

இந்த ஆண்டில் அதிகம் சிரிக்க வைத்தவர்?

இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் ரசிகர்களை சிரிக்க வைப்பதுதான். தமிழ் சினிமாவில் அந்த வேலையைச் செய்வதற்கு காலம் காலமாக யாராவது ஒருவர் மொத்த வருடத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்வது வாடிக்கை. நாகேஷிற்குப் பிறகு கவுண்டமணி - செந்தில், இவர்களுக்குப் பிறகு விவேக் என நீண்டகாலம் தாக்குப்பிடித்தவர்கள் வரிசையில் வடிவேலு காமெடியனாக நுழைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சில வருடங்களாக தமிழ்சினிமாவில் தனிமனிதனாக காமெடியில் கோலோச்சிக் கொண்டிருந்த வடிவேலுவின் தற்காலிக இடைவெளியில் தன் திறமையை சரியாக நிரூபித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார் சந்தானம்.

ஹீரோவுக்காக படங்கள் ஓடிய காலம் போய், சந்தானத்தின் காமெடிக்காகவே 2011, 2012 ஆம் ஆண்டுகளில் படங்கள் ஓடின. கடந்த வருடமும் சந்தானம் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘சிங்கம் 2’, ‘ராஜா ராணி’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய மூன்று படங்கள் ‘டாப் 10 ஹிட்’ வரிசையில் இடம்பிடித்திருக்கிறது. இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக வீசிக் கொண்டிருந்த சந்தானத்தின் அலை 2013ல் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. வடிவேலு, விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு போன்றவர்கள் இந்த வருடத்தில் கிட்டத்தட்ட ‘ஆளையே காணோமே’ என்கிற ரேஞ்சில் இருந்ததால் சந்தானத்தின் காமெடியையே பெரும்பாலான படங்களில் திரும்பத் திரும்ப பார்க்கும் நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இருந்தும் தன்னால் முடிந்த அளவு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையைத் தர முயன்றார் சந்தானம்.

அவருக்கு சமமாக காமெடியில் கடந்த வருடம் கலக்கிய இன்னொருவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருக்கும் சூரி தனது இயல்பான காமெடியின் மூலம் ரசிகர்களை பெரிதும் குஷிப்படுத்தினார். இதில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்களில் இவரின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

படங்களின் எண்ணிக்கையைத் தவிர்த்துவிட்டு, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை முன்னிறுத்திப் பார்க்கும்போது, சூரி இந்த வருடம் கொஞ்சம் முன்னணியில் இருப்பது உண்மை. எனவே, இந்த வருடத்தின் ‘சிறந்த காமெடியன்’ பட்டத்தை சூரி தட்டிச் செல்கிறார்.

Read more...
Share |

இந்த ஆண்டின் சூப்பர் நாயகி?

2013ஆம் ஆண்டு காஜல் அகர்வாலுக்கு ‘அழகுராஜா’, அனுஷ்காவிற்கு ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய 3 படங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்த நயன்தாராவுக்கு ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’, த்ரிஷாவிற்கு ‘சமர்’, ‘என்றென்றும் புன்னகை’, ஹன்சிகா மோத்வானிக்கு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’, ‘பிரியாணி’ ஆகிய 3 படங்கள், ‘கும்கி’ மூலம் அதிரடியாக தமிழ் சினிமாவில் பிரவேசித்த லக்ஷ்மி மேனனுக்கு ‘குட்டிப்புலி’, ‘பாண்டியநாடு’, திடீர் புயலாக வீசிய நஸ்ரியா நசீமிற்கு ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடத்தின் ‘டாப் ஹீரோயின்’ இடத்திற்குப் போட்டி போடுபவர்கள் இந்த 7 பேர்தான்.

இவர்களில் மற்றவர்களை ஓரம் கட்டி முதல் இடத்தைப் பிடித்திருப்பது நயன்தாராவே. 2010ம் ஆண்டில் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு நயன்தாரா தமிழில் நடிக்கவே இல்லை. இடைப்பட்ட இந்த 3 ஆண்டுகளில் நயன்தாரா விட்டுச்சென்ற இடம் அவருக்காகவே காத்திருந்தது என்பது அவர் நடித்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ படங்களின் வெற்றியைப் பார்த்தாலே தெரிகிறது. அதிலும் ‘ராஜா ராணி’ படத்தின் ரெஜினா கேரக்டர் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து படத்தின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருபுறம் ‘ஆரம்பம்’ படத்தில் சீனியர் ஆக்டரான அஜித்துடன் நடித்து, மறுபுறம் ‘ராஜா ராணி’ படத்தில் இளையதலைமுறை நடிகரான ஜெய்க்கும் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. ஆனால், இரண்டு தலைமுறைக்கும் தன்னால் பொருந்தமுடியும் என்பதை தான் ஏற்றிருந்த மாயா, ரெஜினா கேரக்டர் மூலம் நிரூபித்து 2013ல் ‘மனதை மயக்கிய நாயகி’ பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் நயன்.

Read more...
Share |

இந்த ஆண்டின் டாப் ஹீரோ?

ஒவ்வொரு வருடமும் ஒரு ஹீரோ அந்த ஆண்டின் வசூல் சக்கரவர்த்தியாகவும், ரசிகர்களின் ஆதர்ச நாயகனாகவும் இருப்பார். கடந்த 2011ஆம் ஆண்டு ‘கோ’ படத்தின் மாபெரும் வெற்றியால் ஜீவாவும், 2012ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்த ‘துப்பாக்கி’ நாயகன் விஜய்யும் ‘டாப் ஹீரோ’வாக ஜொலித்தார்கள். இந்த ஆண்டு கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு படங்கள் வெளிவந்தன. இவர்களில் இந்த வருட ‘டாப் ஹீரோ’ என்றால் அது சந்தேகமே இல்லாமல் சூர்யாதான்.

ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் வசூலில் சாதனை புரிந்த ‘சிங்கம் 2’ படத்தின் மூலம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சூர்யா. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க 2010ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தபோதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு இருந்தது. அதோடு இப்படம்தான் தமிழின் முதல் தொடர்ச்சிப் படம் என்றும் சொல்லலாம்.

முதல் பாகத்தில் எப்படி இருந்தாரோ அதே இளமைத் துள்ளலுடன், கம்பீர மீசையுடன் மூன்று வருடங்கள் கழித்தும் சூர்யா இப்படத்தில் தோன்றியிருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பஞ்ச் டயலாக்குகளை தவிர்த்து, கதைக்குத் தேவையான வசனங்களை சூர்யா கர்ஜித்தபோது மொத்த தியேட்டரும் அதிர்ந்தது. அதோடு சண்டை, நடனம், காமெடி, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் இப்படத்தில் கலக்கியிருந்தார் சூர்யா. ஹரியின் அதிவேக திரைக்கதை, கச்சிதமான ஒளிப்பதிவு, பரபரப்பான எடிட்டிங் என எல்லா விஷயங்களும் கைகொடுக்க இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப் படமாக ‘சிங்கம் 2’ அமைய இந்த வருடத்தின் ‘டாப் ஹீரோ’வாக ஜொலித்தார் சூர்யா.

Read more...
Share |

2013- என்டர்டெயினர் ஆஃப் தி இயர்?

இந்த வருடம் முழுவதும் ஒருவரின் அலை தொடர்ந்து வீசியதென்றால் அது சிவகார்த்தியேனின் சிரிப்பலைதான். மனிதர் கடந்த 2013ஆம் வருடம் பின்னிப் பெடலெடுத்துவிட்டார். அறிமுகமான இரண்டே வருடத்தில் இவ்வளவு பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் வேறு யாராவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. 2012ஆம் ஆண்டு ‘மெரினா’ படம் மூலம் பாண்டியராஜால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் கடந்த 2013ல் ‘எதிர்நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய மூன்று படங்களின் ஹீரோ. இதில் இரண்டு படங்கள் ஹிட் என்றால் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சூப்பர் ஹிட். நமது ‘டாப் 10 ஹிட் படங்கள்’ பட்டியலில் இவர் நடித்திருக்கும் மூன்று படங்களுமே இடம் பிடித்திருப்பது இன்னொரு சாதனை.

‘எதிர்நீச்சல்’ குஞ்சிதபாதம், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ பட்டை முருகன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போஸ் பாண்டி என இந்த வருடம் முழுவதும் மக்களின் ‘பொழுதுபோக்கு நாயகனா’க விளங்கியவர் சிவகார்த்தியேனே.

Read more...
Share |

இந்த ஆண்டில் ஏமாற்றம் தந்த ‘டாப் 10’ படங்கள்!

ஒவ்வொரு வருடமும் தமிழ்த் திரைப்படங்களில் இந்தப் பட்டியலுக்குதான் போட்டி அதிகமாக இருக்கிறது. நடிகர்களுக்காக மட்டுமின்றி இயக்குனர்களுக்காகவும் படம் பார்க்கும் ரசிகர்கள் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். சில படங்களின் மீதான எதிர்பார்ப்பே அந்தப் படத்தின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக மாறியதும் நடந்தேறியது. வியாபார ரீதியாக ஏமாற்றியது மட்டுமின்றி, பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளான 10 படங்களின் பட்டியல் இதோ...

(ரிலீஸ் தேதி அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)

1. கடல்
2. ஆதிபகவன்
3. சேட்டை
4. நாகராஜ சோழன்
5. அன்னக்கொடி
6. மரியான்
7. தலைவா
8. நய்யாண்டி
9. அழகுராஜா
10. இரண்டாம் உலகம்

Read more...
Share |

அக்காவின் தோழிகளுக்கு ரூட்விட்டு அந்த தொல்லை தரும் அமலாபாலின் தம்பி.

அமலாபாலின் தம்பி அபிஜித், தன் அக்கா வயசு நடிகைகளுக்கு அன்பு தொல்லை கொடுப்பதாக சினிமாவுலகத்தில் ஒரு கிசுகிசு கேட்க ஆரம்பித்திருக்கிறது. இத்தனைக்கும் என்ஜினியரிங் படிக்கணும் என்று சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர்.

அக்கா தலையெடுக்க ஆரம்பித்ததும், தம்பியின் படிப்பு தானாக தொங்கிவிட்டது. இப்போது அமலாவின் அதிகாரமிக்க மேனேஜர் அவர்தானாம். தமிழ்நாட்டில் பெட்ரோல் கூட ஆறாக பெருகி ஓடலாம். அரபு நாடுகளுக்கும் ஆயில் சப்ளை செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஹீரோயினை தேடி கண்டு பிடிப்பது மட்டும் வெண்ணையை கொட்டி அதில் வீல் சேரை ஓட்டிய கதையாகிவிடும். இந்த ஒரு கஷ்டத்தினாலேயே எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் கேரளாவில் போய் ரேக்ளா ரேஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்ம இயக்குனர்கள். இவர்களின் அலைச்சலை பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை தன்னை தேடி வருகிறவர்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் தம்பி.

கால்ஷீட் கேட்பவகளிடம் கட்டிங் போடுவது. ஷுட்டிங் ஸ்பாட்டில் அக்காவுடன் நடிக்க வரும் துணை நடிகைகளுக்கு ஃபிட்டிங் போடுவது என்று ரூட்டே மாறிவிட்டதாம் தம்பிக்கு. அக்காவின் காதுகளுக்கு விஷயத்தை கொண்டுபோக தயங்கும் சிலர் பிரஸ் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அக்கா காதுல விழுந்திருக்குமே இந்நேரம்…

Read more...
Share |

என்னது நா இந்த வண்டிய ஓட்டனுமா: அஜீத்!

சிட்டி சப்ஜெக்டுகளில் என்னதான் தூசு படியாமல் நடித்தாலும், கிராமத்து கதை என்று வருகிறபோது சேற்றுக்குள் உருண்டு புரள்கிற மாதிரியான காட்சிகளும் இருக்கும். ஆரம்பம் படம் வரை ஜீன்ஸ்-டீசர்ட் என்று நடித்துக்கொண்டிருந்த அஜீத், வீரம் படத்தில் வேஷ்டி-சட்டைக்கு மாறியுள்ளார். ஐந்து அண்ணன்-தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்ஷன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம்.

மேலும், ஒரு சண்டை காட்சியில் மாட்டு வண்டியில் தப்பித்து செல்லும் வில்லன்களை, தானும் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்தே துரத்தி துரத்தி சண்டை செய்யும் காட்சியிலும் நடித்துள்ளாராம் அஜீத்.

சில நாட்களாக இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு, அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதாம். அஜீத் சார்பிலேயே இந்த விருந்து நடத்தப்பட்டதால் அவரே கிராம மக்களுக்கு உணவு பரிமாறினாராம்.

Read more...
Share |

அழகு, திறமை என்றால் ஹன்சிகா தான் : சிம்ரன்

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் ‘இன்று திறமையும், அழகும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகை ஹன்சிகா தான்´என தெரிவித்துள்ளார்.

விஜயுடன் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் அறிமுகமான நடிகையான சிம்ரன், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர்.

திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்ற சிமரன் தொழிலதிபர் ஒருவரை மணந்த பின், சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்தார்.

மீண்டும், சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்,வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தோன்றி வருகிறார்.

அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நேர்காணலில் ஹன்சிகாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Read more...
Share |

விஷாலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் திடீரென ´ஹாட்´டாகி விட்டார். அதாவது சூடான முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி,அப்படத்தில் விஷாலுக்கு செமத்தியான லிப் லாக் முத்தம் கொடுத்து பரவசப்படுத்தியுள்ளாராம்.

கவர்ச்சிகரமான, உணர்ச்சிகரமான காட்சி ஒன்றில் லட்சுமி நடித்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் சற்றே பரபரப்புடன் இதைப் பேசிக் கொள்கிறார்கள்.

வழக்கமாக மலையாளத்திலிருந்து நடிக்க வரும் நடிகைகள் பலரும் கவர்ச்சிக்குத்தான் முதலில் பச்சைக் கொடி காட்டுவார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை.

ஆனால் தற்போது திடீரென லட்சுமி மேனனும் கவர்ச்சி பக்கம் சாயத் தொடங்கி விட்டாராம். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இப்படத்திற்காக விஷாலுக்கு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம்..

அதாவது லிப் லாக். இந்த முத்தக் காட்சி எத்தனை நொடி, எத்தனை நிமிடம் நீடிக்கிறது என்ற ´புள்ளி விவரம்´ தெரியவில்லை!.

இந்த முத்தக் காட்சி படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று இயக்குநர் பீல் பண்ணியதால் நடிக்க அதாவது முத்தம் கொடுக்க ஒத்துக் கொண்டாராம் லட்சுமி.

இந்த முத்தக் காட்சியை வழக்கம்போல கலை நயத்தோடு படம் பிடித்துள்ளார்களாம். ஆபாசமாக தெரியாதாம்.

விஷாலுடன் லட்சுமி ஜோடி போடுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே அவர் பாண்டியநாடு படத்தில் கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இப்போது 2வது முறையாக சூடான முத்தக் காட்சி புடை சூழ விஷாலுடன் ஜோடி கட்டியிருக்கிறார். என்னென்ன வதந்தி கிளம்பப் போகுதோ...!
Read more...
Share |

‘ஜில்லா’வில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஜீவா.

ஜில்லா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்கிறாராம் ஜீவா.

விஜய், மோகன்லால் நடித்திருக்கும், ‘ஜில்லா’ இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்திருக்கிறது.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை நேசன் இயக்கியிருக்க, டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் டிரெய்லர் ஜனவரி 1ம் தேதி ரீலிசாகவிருக்கிறது.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு ஹைலைட் விஷயமாக விஜய்யுடன் ஜீவாவும் ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடியிருக்கிறாராம்.
Read more...
Share |

கமல் பாடலை மக்கள் மனதில் இருந்து மறக்கடிப்பேன். சிம்பு

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் வானொலியிலும், தொலைகாட்சியிலும் தவறாது இடம்பெறும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது கமல் நடித்த சகலகலாவல்லவன் படத்தில் வரும் 'இளமை இதோ இதோ' என்ற பாடல்தான். அந்த டிரெண்டை நான் மாற்றிக்காட்டுவேன் என சவால் விட்டிருக்கிறார் சிம்பு.

சிம்பு சென்ற வாரம் புத்தாண்டு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் மகாபலிபுரம் என்ற படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் விநாயக், அவரே நடித்து தயாரிக்கும் இந்த படத்தை டான் சாண்டி என்பவர் இயக்குகிறார். இவர் தயாரிப்பாளரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. டான் சாண்டி, இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயக் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் மகாபலிபுரம் படத்திற்கு ஒரு புத்தாண்டு பாடலை பாடித்தருமாறு சிம்புவிடம் கேட்டுக்கொண்டார். யுகபாரதி எழுதிய அந்த பாடலின் வரிகளை பார்த்தவுடன் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார் சிம்பு. கமல்ஹாசன் படத்தில் வரும் "இளமை இதோ இதோ" என்ற பாடலை விட கட்டாயம் இந்த பாடல் ஹிட் ஆகும் என்று அடித்து கூறுகிறார் சிம்பு. வரும் புத்தாண்டு தினத்தில் இந்த ஒரு பாடலை மட்டும் யூடியூபில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் விநாயக்.

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் "கே' என்ற இசையமைப்பாளர். இவர் ஏற்கனவே மிஷ்கினின் முகமூடி மற்றும் யுத்தம் செய் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...
Share |

பொது இடத்தில் ஸ்ரேயாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்.

ஆந்திராவில் நடிகைகள் கடைதிறப்பு போன்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு வரும்போது ரசிகர்களின் அன்புத்தொல்லையாலும், சில சமயம் எல்லை மீறும் ரசிகர்களாலும், பிரச்சனை வருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதுமட்டுமின்றி அவர்கள் வருகைதரும் இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆந்திரபோலீஸார் திறப்புவிழா நடத்தும் நிறுவனங்களையும், அதில் கலந்துகொள்ள வரும் நடிகைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் அனுஷ்கா, ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற ஊரில் ஜவுளிக்கடையை திறக்க வந்தபோது ஒரு ரசிகர் அத்துமீறி அனுஷ்காவிடம் நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று விசாகப்பட்டினத்திலும் ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் சாலையில் கூடியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபக்கங்களிலும், போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் நிகழ்ச்சி நடத்துனரை அழைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் போலீஸிடம் அனுமதி வாங்கவேண்டும் என்றும், நடிகைகள் வருவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

ஸ்ரேயா இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துகொண்டு அவரை பார்ப்பதற்கும், அவரிடம் கைகுலுக்குவதற்கும் ஆட்டோகிராப் வாங்குவதற்கும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்கள் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Read more...
Share |

இந்த ஆண்டில் சினிமாவை அழகாக்கிய அழகிகள்


காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது.

என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.

ஹன்சிகா
சிம்புவுடன் காதல், பின்பு பரிவு, ஆந்திரத்து ஹீரோவுடன் புது காதல், அம்மாவுடன் கருத்து வேறுபாடு என ஆயிரம் கிசுகிசுவில் சிக்கினாலும் ஹன்சிகா தன் படங்களில் தீவிரம் கவனம் செலுத்தினார். அதனால் இந்த ஆண்டு சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி என 4 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் சேட்டை தவிர மற்ற அனைத்தும் அவருக்கு வெற்றிப் படங்கள்தான்.

அனுஷ்கா
ஆறடி அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் என மூன்று படங்கள். அவரைப் பொறுத்தவரை மூன்றுமே சரியாக அமையவில்லை. அலெக்ஸ் பாண்டியன் பிளாப், இரண்டாம் உலகம் பட்ட கஷ்டமெல்லாம் பாழாய்ப்போன படம். சிங்கம் 2 ஹிட்டானாலும் அவரது கேரக்டர் பேசப்படவில்லை.

நயன்தாரா
நயன் நடிச்சது இரண்டே படம்தான். இரண்டுமே ஹிட்டு, அவர் காட்டில் பெய்தது துட்டு மழை. ராஜாராணியில் ரொமான்ஸ், ஆரம்பத்தில் ஆக்ஷன் கிளாமர்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடினார்.

நஸ்ரியா
நேரம் படத்தின் மூலம் வந்த நல்ல நேரம் நஸ்ரியாவுக்கு எல்லாமே ஜெயம்தான். ராஜாராணியில் இமேஜ் எகிற நய்யாண்டியில் கொஞ்சம் இறங்கியது. சின்ன தொப்புள் பிரச்சினையை பெருசாக்க இண்டஸ்ட்ரி அவரை பார்த்து பயந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.

த்ரிஷா
சினிமாவுக்கு வந்து பத்து வருஷமானலும் இப்பவும் பிரிஜ்லேருந்து எடுத்த ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறார். சமர் கைவிட்டது. என்றென்றும் புன்னகை அவருக்கு புன்னகையை கொடுத்தது.

லட்சுமி மேனன்
இன்றைய தேதிக்கு ராசியான நடிகையா இருக்கிறவர் இவர். லட்சுமியின் தேதிக்காக பணப்பையுடன் வீட்டு வாசலில் ரேஷன் கடை கியூதான். இந்த ஆண்டு நடித்த குட்டிப்புலி, பாண்டியநாடு இரண்டுமே லட்சுமியிடம் லட்சுமியை குவித்தது.

டாப்ஸி
வெள்ளாவி பொண்ணுக்கு இந்த வரும் இரண்டு படங்கள்தான் கிடைத்தது. இரண்டிலுமே இணை ஹீரோயின்தான். ஆரம்பம், மறந்தேன் மன்னித்தேன். டாப்ஸி டாப்புக்கு வர இன்னும் கடுமையா உழைக்கணும்.
ப்ரியா ஆனந்த்: எதிர்நீச்சல் நல்ல இடத்தை கொடுத்துது. வணக்கம் சென்னையில் அதை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார்.

பிந்து மாதவி
கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஹிட்டாக பிந்து பிசியாகிவிட்டார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஹிட்டாக வருத்தப்படாத நடிகைகள் சங்கத்தில் இணைந்து விட்டார்.


Read more...
Share |

இந்த ஆண்டின் டாப் டென் பாடல்கள்

ஒரு ஆண்டின் டாப் டென் பாடல்களை கணிப்பது சற்ற கடினமான வேலை. காரணம் சில படங்கள் ஜனவரியில் ரிலீசாகியிருக்கும் ஆனால் பாடல்கள் கடந்த டிசம்பரிலேயே வெளியாகி ஹிட்டாகியிருக்கும்.

முதல் 6 மாதங்களில் வந்த படங்களின் பாடல்கள்தான் திரும்ப திருப்ப ஒலிபரப்பாகியிருக்கும். நவம்பர் டிசம்பரில் வந்த பாடல்கள் இந்த ஆண்டில் குறைவாக ஒலிபரப்பாகி அடுத்து ஆண்டில் அதிகமாக ஒலிபரப்பாக வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஏர்செக் என்ற அமைப்பு இந்தியாவின் 18 நகரங்களில் உள்ள எப்.எம். ஒலிபரப்பை மானிட்டர் செய்து அதிக முறை ஒலிபரப்பான பாடல்களை பட்டியலிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் உள்ள எம்.எம்.சேனல்களை மானிட்டர் செய்து அது வெளியிட்டுள்ள டாப் டென் பாடல்கள் வருமாறு (படம், இசை அமைப்பாளர் பாடியர்கள் பெயர் அடைப்பு குறிக்குள்):

1.பூமி என்ன சுத்துதே… (எதிர்நீச்சல்-அனிருத்)

2.யாரோ இவன்… (உதயம் என்.எச் 4-ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி)

3.கடல் ராசா… (மரியான்-ஏ.ஆர்.ரகுமான்-யுவன்)

4.வாங்கண்ணா வணக்கங்கண்ணா…(தலைவா-ஜி.வி.பிரகாஷ்-விஜய்)

5.நெஞ்சுக்குள்ளே… (கடல்-ஏ.ஆர்.ரகுமான்-சக்திஸ்ரீ)

6.மெல்ல சிரித்தால்… (ஆதலால் காதல் செய்வீர்-யுவன்)

7.உன்னை காணாது நான்… (விஸ்வரூபம்-சங்கத் எஹாசன் லாய்-கமல் மற்-றும் சங்கர் மகாதேவன்)

8.ஆஹா காதல் கொஞ்சி பேசுதே… (மூன்று பேர் மூன்று காதல்-யுவன்-நந்தினி ஸ்ரீகர்)

9.ஒசாகா… ஒசாகா… (வணக்கம் சென்னை-அனிருத்-அனிருத்-பிரகதி)

10.ஹேய் பேபி (ராஜாராணி-ஜி.வி.பிரகாஷ்- கானாபாலா-ஐஸ்வர்யா)

இது எப்.எம்மில் ஒலிபரப்பான எண்ணிக்கை அடிப்படையிலான பட்டியல்தானே தவிர இறுதியானதும், உறுதியானதுமான பட்டியல் அல்ல.
Read more...
Share |

புலிகளுடன் முத்தழகு

புலிகளுடன் புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் முத்தழகு.

நடிகை ப்ரியாமணி புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்தினரோடு பாங்காக் சென்றுள்ளார்.

அங்கு புலிகள் கோவிலுக்கு சென்ற இவர் புலிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில், ஒரு படத்தில் பிரியாமணியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கிறது ஒரு புலி. மற்றொரு படத்தில் புலியை வருடிக் கொடுத்தவாறு போஸ் தந்துள்ளார்.

பொதுவாகவே பிராணிகள் நலனில் அக்கறைக் கொண்ட இவர், அங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த புலிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Read more...
Share |

இந்த ஆண்டின் டாப் 10 படங்கள்

2013ல் 157 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்கள் பத்து சதவீதம் இருந்தால் ஆச்சர்யம் தான். டாப் லிஸ்ட்டில் இருக்கும் பத்து படங்களை மட்டும் நாம் பார்க்கலாம். இது கமர்ஷியல் வெற்றியாக மட்டுமே இல்லாமல் ரசிகர்களின் மனதைத்தொட்ட படங்களையும் சேர்த்துத்தான்.

விஸ்வரூபம்
பெயருக்கேற்ற மாதிரி எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் கடந்து எதிர்த்தவர்களுக்கும் சேர்த்து, மூர்க்கமான போராட்ட குணத்துடன் வெளியிலும் விஸ்வரூபம் காட்டினார் கமல். படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடத்தில் கமல் எடுக்கும் விஸ்வரூபம் முதன்முதலாக படம் பார்க்கவந்தவர்களை உறைய வைத்திருக்கும். பாட்ஷா, ரன் படங்களுக்குப்பின் யூகிக்கமுடியாத கோணத்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் ரசிகர்களை அதிரவைத்தது என்றால் அது இந்தப்படத்தில்தான்

சிங்கம்-2
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எப்படி எடுக்கப்பட வேண்டும் எப்போது எடுக்கப்படவேண்டும் என தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு தடம் மாற்றிக் காட்டியது ‘சிங்கம்-2’. படம் பார்ப்பவனை இது ஏன் எப்படி என யோசிக்கவிடாமல், இரண்டுமணி நேரமும் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்து அனுப்பிய சாகசம் ஹரி-சூர்யா கூட்டணிக்கு மட்டும்தான் சேரும்

ஆரம்பம்
பில்லா-2வில் அஜித்திற்கு ஏற்பட்ட சரிவை மீண்டும் நிமிர்த்தியது ‘ஆரம்பம்’. அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி. ராணா என நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து ஹைடெக்கான ஆடுபுலி ஆட்டம் ஆடியிருந்தார் விஷ்ணுவர்தன். ஈகோ பார்க்காத, அலட்டல் இல்லாத அஜித்தின் நடிப்பு படம் முழுதும் அப்ளாஸை அள்ளியது.

சூதுகவ்வும்
ஒரு சீரியஸான் கதையை ஹீரோயிசம், குத்துப்பாட்டு, பஞ்ச் வசனங்கள் எதுவும் இல்லாமல் எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லி இருந்தார்கள். இதுவரை தமிழ் சினிமா டெரராகக் காட்டிய ஆள் கடத்தலை ஜாலி கலாட்டாவாகப் படைத்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நலன் குமரசாமி. 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான நடிப்பு கதைக்கு பக்கபலமாக நின்றது..

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வியக்கவைகும் கதை இல்லை, திகைக்க வைக்கும் மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ இல்லை, ஆனால் 100 நாள் ஓடியது என்றால் அதற்கு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருந்த பொன்ராம் தான் முதல் காரணம், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி என அனைவரும் தங்களது நூறுசதவீத உழைப்பைக் கொடுக்க, கூடவே இமானின் இன்னிசையும் தோள்கொடுக்க ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ஒரு ஸ்மார்ட்டான காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாய் வெளிவந்தது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. வரிக்கு வரி சிரிக்கவைக்கும் காமெடியும் ‘சுமார் மூஞ்சி குமார்’ ஆகவே மாறிவிட்ட விஜய் சேதுபதியின் நடிப்பும் படத்திற்கு ப்ளஸ் என்றால் பாடல்கள் டபுள் ப்ளஸ் ஆக அமைந்தது.

மூடர்கூடம்’
‘நான்கு முட்டாள் திருடர்களைப் பற்றிய ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும். ஆனால், இந்த கதையை காமெடியாக, கலர்ஃபுல்லாக, அதேசமயம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருந்தார் பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யரான நவீன். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, இயக்குனர் மணிரத்னத்தையும் ஷங்கரையும் படம் பார்க்க தூண்டியதுடன் பார்த்துவிட்டு மனம் விட்டுப் பாராட்டவும் வைத்தது .

தங்க மீன்கள்
குழந்தைகளின் உலகமே தனியானது. அதை குழந்தைகளின் மனநிலையுடன் அவர்களுக்கு சரிசமமாக இறங்கிப்பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதை அழுத்தமாக சொன்ன படம்தான் தங்க மீன்கள். எந்தவித வியாபார நோக்கமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய, அதிலும் கட்டாயம் குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு படமாக தங்க மீன்களை எடுத்த ராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் நம்மை இன்னும்கூட தாலாட்டுகிறது.

ஆதலால் காதல் செய்வீர்
அவ்வப்போது பேப்பரில் படித்துவிட்டு அடுத்தநாளே மறந்துபோகும் செய்திதான்.. ஆனால் படிக்கிற வயதில் ஆண், பெண் இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு தவறான திசையில் பயணித்தால் என்ன ஆகும் என்பதை இரண்டரை மணி நேர படமாக… இல்லையில்லை பாடமாக எடுத்திருந்தார் சுசீந்திரன்.

பாண்டியநாடு
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன். தெளிவான திரைக்கதை, கதையோடு பின்னிக்கொண்டு அளவு மீறாத ஆக்‌ஷன், பொருத்தமான கதபாத்திரத் தேர்வு என அனைத்தும் இந்தப்படத்தில் சரிவிகிதத்தில் அமைந்திருந்ததும் படம் 50 நாட்கள தாண்டி ஓடவும் காரணமாக அமைந்தன.

Read more...
Share |

சூர்யா படத்தில் சூரி

சூர்யா வருகிற 2014 ல் மற்றொரு மாஸ் ஹீரோவான நடிகர் சூர்யாவுடனும் இணைந்து நடிக்கவுள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்பட்ட நடிகர் சூரி இந்த ஆண்டில் தயாரிப்பாளர்களின் விருப்பத் தேர்வாக மாறியிருக்கிறார். இவ்வாண்டில் வெளியான சில திரைப்படங்கள் இவருக்கு இந்த அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்துள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தேசிங்கு ராஜா படங்களில் ஹீரோவிற்கு இணையான காட்சிகள் இவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துவருகிறார்.

தமிழின் மிக முக்கிய மாஸ் ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் இவர் “ஜில்லா” படத்தில் நடித்துள்ளார். அப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து மற்றொரு முக்கியமான மாஸ் ஹீரோவான சூர்யாவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் தற்பொழுது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. அந்தப்
படத்தில் சூரி நடிக்கவுள்ளார். சூரி- சூர்யா நடிக்கும் காட்சிகள் வருகிற 2014 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளன.

Read more...
Share |

ஜோதிகாவை போல ‘கண்களால் பேச ஆசைப்படும்’ லட்சுமிமேனன்

சென்னை: நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம்.
கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன்.

மலையாள வரவான லட்சுமிமேனன், தான் இதுவரை நடித்துள்ள படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். கண்களால் உணர்ச்சிகளைக் காட்டும் அவரது ரோல் மாடல் நடிகை ஜோதிகா தானாம்.

முதல்படம்...
பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால், அவரது சுந்தர பாண்டியன் படமே முதலில் திரைக்கு வந்தது.

அற்புதமான நடிப்பு...
தற்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் லட்சுமிமேனன், தனது முதல் படமான கும்கியில் யானையைக் கண்டு மிரண்டு ஓடும் காட்சிகளில் கண்களில் அப்படியொரு பிரமிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் லட்சுமிமேனன்.

ரோல் மாடல்... 
கண்களில் உணர்ச்சிகளில் வெளிப் படுத்தும் வித்தையை நடிகை ஜோதிகாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம் லட்சுமிமேனன். சினிமாவில் இவரது ரோல் மாடல் என்றால் அது ஜோதிகா தானாம்.

பலமுறை.... 
ஜோதிகாவின் நடிப்புக்காகவே காக்க காக்க, சந்திரமுகி படங்களை பலமுறை பார்த்து லயித்திருக்கிறாராம் லட்சுமிமேனன். 

ஜோதிகா கற்றுக் கொடுத்தது... 
‘கண்களிலேயே நடிப்பை காட்டி விடுகிறவர். இப்போது நான் நடிக்கும் படங்களில் கண்களின் மூலம் ஏதாவது நடிப்பை வெளிப்படுத்தினேனென்றால், அது ஜோதிவிடம் கற்றுக் கொண்டது தான்' என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் லட்சுமிமேனன்.

ஜோதிகா போல்... 
சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட பாண்டிய நாடு படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிமேனன். அப்படத்தில் ஆசிரியராக வரும் லட்சுமிமேனன், அசப்பில் அப்படியே நடை, உடை பாவனைகளில் ‘காக்க காக்க' ஜோதிகாவை ஞாபகப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜோவுக்கு பிடித்த நடிகை... 
அதேபோல், தற்போதுள்ள நடிகைகளில் ஜோதிகாவிற்குப் பிடித்த நடிகை லட்சுமிமேனன் தானாம்.
Read more...
Share |

அதற்கு பிரபுதேவாதான் காரணம்?

பிரபுதேவா இயக்கும் இந்தி பட ஷூட்டிங் முடியாததால் சிங்கம் 2 பட ரீமேக் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிக்க ஹரி இயக்கத்தில் உருவான படம் சிங்கம். இப்படம் இந்தியில் சிங்ஹம் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். சூர்யா நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கினார். இப்போது இதன் இரண்டாம் பாகமாக சிங்ஹம் 2 உருவாகி வருகிறது. ஆனால் இப்படத்துக்கும் சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கும் சம்பந்தமில்லை. வரும் பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அஜய் தேவ்கன் தற்போது பிரபு தேவா இயக்கும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் நடித்து வருகிறார். இம்மாதம் இதன் ஷூட்டிங் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ஆர் ராஜ்குமார் படம் ரிலீஸ் ஆனதால் அதற்கான புரமோஷன் பணிகளில் பிரபு தேவா பிஸியானார். இதனால் ஆக்ஷன் ஜாக்சன் ஷூட்டிங் நின்றுபோனது.

ஆக்ஷன் ஜாக்சன் படத்தை முடித்துவிட்டு சிங்ஹம் 2வில் நடிக்க முடிவு செய்துள்ளார் அஜய். இதுதொடர்பாக ரோஹித் ஷெட்டியும், அஜய் தேவ்கனும் சந்தித்து பேசினர். அப்போது சிங்ஹம் 2 பட ஷூட்டிங்கை ஏப்ரலுக்கு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.

Read more...
Share |

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

விஜய்யின் ஜில்லா.. நல்லா வரணும் ... என்பதுதான் நமது ஆசையும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் 'தலைவா ரிடர்ன்ஸ்' ஆகிவிடுமோ என்ற கவலையில் விஜய்யின் ரசிகர்கள் - அவரைக் கிண்டலடிப்போர் என அத்தனைப் பேருக்கும் வந்துவிடும் போலிருக்கிறது!

பின்னே... போட்டியாளரான அஜீத்தின் வீரம் பட ட்ரெயிலர், இசை... அட சென்சார் சான்றிதழ் கூட வெளியாகிவிட.. விஜய்யின் ஜில்லாவுக்கு இன்னும் டீசர் கூட வெளியாகவில்லை.

இசை வெளியீடு என ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்துக்கு இப்படியா இசை வெளியீட்டு விழா நடத்துவார்கள் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில்!
கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஜில்லா பட முன்னோட்டம் வெளியாகும் என விஜய் மற்றும் ஆர்பி சவுத்ரி இருவருமே அறிவித்திருந்தனர்.
ஆனால் அன்றைய தினம் வெளியாகவில்லை. டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என மீண்டும் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை அதுகுறித்த உறுதியான தகவல் ஏதுமில்லை.

இப்படித்தான் தலைவா விஷயத்திலும் நடந்தது. அப்படி ஏதும் ஆகிவிடக் கூடாதே என இப்போது ரசிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வேண்டுகிறார்கள் (பின்னே... எத்தனை முறைதான் இந்த செய்தியையே எழுதிக் கொண்டிருப்பது!!).

Read more...
Share |

புறம்போக்கில் இணைந்த ஷாம்

‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.

சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞன், அவனுக்கு துணையாக மற்றொரு இளைஞன். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் ஷாம் நடிக்கிறாராம். இவர் ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா ஒருவரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் வேறு கதாநாயகி இல்லை. ஜனவரி 14-ந் தேதி குலுமணாலியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Read more...
Share |

ரஜினியை இயக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா தனுஷ்!

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருந்த அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதனால்தான், அடுத்து உடனடியாக வை ராஜா வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.

முதல் படத்தை விட இரண்டாவது படத்தை ஹிட்டாக கொடுத்து பேசப்படும் இயக்குனராகி விட வேண்டும் என்று கவனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது தங்கை செளந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி விட்டதால், ஐஸ்வர்யாவுக்கும் அப்பாவை வைத்து ஒரு மெகா படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

அதனால் ஏற்கனவே அப்பாவுக்காக சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த ஐஸ்வர்யா அதில் ஒரு சிறந்த கதையை மெருகேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். வை ராஜா வை தான் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் படமாக அமைந்தால், தான் ரெடி பண்ணி வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை அப்பா ரஜினியிடம் சொல்ல திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.

Read more...
Share |

ட்விட்டரில் சூரியின் பெயரால் ரஜினிக்கு அவதூறு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாகவும் பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.

இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. எப்படி என்கிறீர்களா.. இந்தப்படம் பற்றி ட்விட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க.. சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்

ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் விசாரித்த்தில் சூரிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாது.. அதற்கான நேரமும் அவருக்கு இல்லை.. அப்படியே இருந்தாலும் ரஜினியையோ மற்ற பிரபலங்களையோ தாக்குவதற்கு அவர் என்ன முட்டாளா? என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

இப்போதுதான் யார் வேண்டுமானாலும் யாருடைய பெயரிலும் போலி கணக்குகளை ஆரம்பித்துக்கொள்ள முடியுமே.. இதற்கு முன் எத்தனை பேருக்கு அப்படி பிரச்சனைகள் கிளம்பி, அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கையே மூடிய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. சூரியின் வளர்ச்சியைப் பொறுக்காத யாரோ சில விஷமிகள் தான் இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Read more...
Share |

விக்ரம் பிரபுவின் அடுத்த படம்

கும்கி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகர் விக்ரம் பிரபு. அறிமுகப் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
அதையடுத்து கடந்த டிசம்பர் 13ல் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படமும் பெரு வெற்றியடைந்தது.

இவன் வேற மாதிரி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு ஹரிதாஸ் திரைப்படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும்.

விக்ரம் பிரபு தற்பொழுது தூங்கா நகரம் திரைப்படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் சிகரம் தொடு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தை யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சத்யராஜ், கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துவருகிறார்கள்.

Read more...
Share |

வீரம் – பாடல்வரிகள்

படம்: வீரம்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்: விவேகா
பாடியவர்கள்: சாஹர், ஸ்ரேயா கோஷல்,தேவி ஸ்ரீ பிரசாத்,ஆனந்த், கெளசிக், தீபக், ஜாகடி,அட்னான் சாமி, பிரியதர்ஷினி

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள – பாடல்வரிகள்

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள்தானா
இவள்தானா
மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா
இவன் தானா
போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ…
இவள்தானா
ஓ இவள்தானா…
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே
தனியே
நீ வீதியிலே
நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ
கூர்த்த நூலாக
தெருவே
அங்கு தெரிகிறது
காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா
இவன் தானா
ல ல ல லா லே லா…
குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்
அடடா
உன் கண் அசைவும்
அதிரா
உன் புன்னகையும்
உடலின்
என் உயிர் பிசையும்
உடலில்
ஒரு பேர் அசையும்
காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள்தானா
ஓ இவள்தானா…
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க -பாடல்வரிகள்

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க
சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும்
ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும்
எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்
ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஓஹோய் ஓஹோய்
1 2 3 4 5
ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஹோய்..
மனம் மனம் மனம் வெள்ளை
கர கர கர இல்ல
எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம்
எஸ்…
பள பள பள வேஷ்டி
பளபளக்குற கோஷ்டி
ஓஹோ…
உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
எங்க ஊரு வந்து பாருடா
அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா
1 2 3 4 5
ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்
1 2 3 4 5
ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
டேய்…மாட்டுனீங்க இன்னைக்கு
ஐயோ
அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா
வேண்டாம்டா தம்பி
சொன்னா கேளு வேண்டாம்
பல பல பல கூட்டம்
பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம்
ஆமா…
சிறு சிறு சிறு சேட்ட
ஒஹோ…
விறு விறு விறு வெட்ட
ஓ…ஒ..
பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்
அன்டர் வாலர் பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை
கொக்கு கருப்பு
நாங்க சொன்னா கேளுடா

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும் -பாடல்வரிகள்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சக மனிதன்
ஒரு துயர் என கசிந்ததும்
அகம் பதறி
எழும் வீரம்
துளல் அளவும்
பகை புகழ் இங்கு தவறென
காப்பரணாய்
நிற்கும் வீரம்
தனி அரிமா
போல இந்த தருணம் தாக்கிடும்
பெரும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணை இல்லா வீரம்
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்
எரிதழலாய் நின்று
எதிரிகள் அலறிட
சமரினில் திடிரிடும் வீரம்
பயம் எனும் சொல்
இங்கு பரிட்சயம் இல்லையடா
பரம்பொருள் வரம் தந்த வீரம்
கடும்புனலே
மோதவரும் வேளையில்
கழிப்புரும் தனி வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

தங்கமே தங்கமே என்ன ஆச்சு -பாடல்வரிகள்

ஹேய்..
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது
பொத்திவச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது
ஹேய்…ஹேய்…

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

ஆசை பின்னுது
உசிரோ தின்னுது
ஏதோ பன்னுது உன்னால

புதுசாக
என்ன ஆரம்பிச்ச
நம்ம வாழ
நெஞ்ச ஊராவச்ச
அழகாலே
என்ன ஆற வச்ச
ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…

விரல் நீட்டி
என்ன வேகவச்ச
சுகமாக
என்ன சாகவச்ச
என்ன தாண்டி
என்ன நோகவச்ச
ஹைய்யோ…ஹைய்யோ… ஹைய்யோ…ஹைய்யோ…

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

நீ வாடகைக்கு வீடும் தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூ வளர்க்கும் பொட்டை ஒன்று
நீ வசிக்க தாலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்

நீரில் வந்தாய்
சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே

பூவின் எடை
காற்றின் எடை
சேர்த்த விடை உன்தன் எடை
ஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

உன்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லை பார்த்தேன்
நான் பூத்தேன்

உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாக போட்டேன்
உயிர் சேர்த்தேன்

காதல் ஒரு
காதல் ஒரு
போதை நதி
போதை நதி
முழ்க கூட தேவையில்லை
பார்க்கும் போது உன்னை சாய்ப்போம்

காதல் ஒரு
காதல் ஒரு
நீண்ட சதி
நீண்ட சதி
சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

Read more...
Share |

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் அமலாபால்.

எதிர்நீச்சல் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த படக்குழு மீண்டும் ஒருமுறை இணைகிறது. சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குனர் துரை செந்தில்குமார் ஆகியோர் மீண்டும் இந்த படத்தின் பெயர் எதிர்நீச்சல் 2. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான சிவகார்த்திகேயனை அவரது எதிரிகள் சதி செய்து அவர் மீது கொலைப்பழி சுமத்தி போலீஸ் வேலையில் இருந்து வெளியேற்றுகிறார்கள். உண்மையான கொலையாளியை கண்டுபிடித்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக எப்படி வருகிறார் என்பதுதான் கதையாம்.

இந்த படத்தின் சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக ஜோடி சேருகிறார் அமலாபால். ஹன்சிகாவை அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் அடுத்த பிரபல ஹீரோயின் வரிசையில் அமலாபால் சேர்கிறார். மான் கராத்தே படத்திற்காக பாக்ஸிங் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக குங்பூ கற்றுக்கொள்கிறாராம். இந்த படத்தின் வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் வில்லனுடன் மோதி வெற்றி கொள்வதற்காக குங்பூ கற்றுக்கொள்வதுபோல படத்தில் காட்சி வருகிறதாம். அதற்காக உண்மையிலேயே குங்பு பயிற்சிக்கு செல்ல இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை தனுஷ் தனது படக்கம்பெனியான Wunderbar Films என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.

Read more...
Share |
Previous Page Next Page HOME