.

news

Latest Post

www.tamilcinemafire.com இப்போது புதிய பொலிவுடன்

Written By sasikumar on Saturday, March 08, 2014 | 1:22 PM

www.tamilcinemafireblogspot.in இப்போது புதிய பொலிவுடன் www.tamilcinemafire.com 
ஆனது. ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி

இளைய தளபதி விஜய் கோலிவுட் கிங்கா...?

Written By sasikumar on Friday, March 07, 2014 | 6:05 PM

விஜய் கோலிவுட் கிங் என்பது சரியா ரஜினி கமல் விஜய் அஜித் என்ற நட்சத்திர நடிகர்கள் அவரவர் வழியில் கோடம்பாக்கத்தை கலக்கி கொண்டிருக் கின்றனர். ஆனால் விஜயை மட்டும் கோலிவுட் கிங் என்று அழைப்பதில் சில காரணங்கள் இருக்கின்றது.

அஜித்,சூர்யா போன்ற நடிகர்கள் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்றிருக்கும் வேளையில் இதுவரை ஒரு பிலிம்பேர் விருது வாங்காத விஜய் ஆனால் இவரால் எப்படி இவ்வளவு ரசிகர்களை பெறமுடிந்தது...? இதுதான் விஜயின் ரகசியம்...

எப்படி எந்திரன் படத்தின் மூலம் ரஜினி ஒரு புதிய பாக்ஸ் ஆபிஸ் பேரரசர் ஆனாறோ அப்படித்தன் விஜயும் துப்பாக்கி மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனார் அஜித் சூர்யா போன்ற நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன் பெருசு இல்லை விஜய்க்கு மட்டும்தான் அதிகார பூர்வமாக விஜயே ரஜினிக்கு அடுத்து 100கோடிகிளப்-ல் நுழைந்த இரண்டாவது நடிகர் ஆவார்.

இன்று தமிழ் நடிகர்களில் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர் விஜய் ஒருவரே என்பதற்க்கு கூகுள் மற்றும் பேஸ்-புக் போன்ற சமூக வளைதளங்கள் அறிவித்துள்ளது.இவரது திறமை நடனம்,பாட்டு,சண்டை அதுமட்டும் அல்ல துப்பாக்கி,தலைவா,ஜில்லா,போன்ற படங்கள் எல்லோராலும் ஒன்று பாராட்ட படும் அல்ல எதிர்க்கப்படும்.

இப்படி நிறைய காரணங்களால் ரசிகர்கள் இளைய தளபதி என்று அழைக்கப்படும் விஜய் கோலிவுட் கிங் என்று அழைப்பது சரியே...... இனி உங்கள் கருத்தை கமன்டில் தெரிவுப்படுத்துங்கள்.....

சிம்புவின் பார்வை பட்டாலே அவுங்களுக்கு தரித்தரம் ஒட்டிக்கொள்ளுமாம்......!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’ தான். அதுவும் கூட அவர்கள் திருமணம் செய்யும் வரை தான் அந்த இடம் அவர்களுக்கு கிடைக்கும்.

தப்பித் தவறி ஒரு நடிகை நான் இன்னாரை காதலிக்கிறேன், அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொல்லி விட்டால் போதும்.

அதுவரை அவர் அட்வான்ஸ் வாங்கி கமிட் செய்து வைத்திருந்த படங்கள் கூட சில நேரங்களில் அப்படியே பேக்கடிக்க ஆரம்பித்து விடும். அவருடைய மார்க்கெட்டும் பங்குச்சந்தை போல இறங்க ஆரம்பித்து விடும்.

சிம்புவை காதலிக்கிறேன் என்று ஹன்ஷிகா ஓப்பனாக சொன்னவுடன் அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகள் இப்படித்தான் ஒவ்வொன்றாக பேக்கடித்தன. அதற்கு முன்பு அவர் கமிட் செய்து வைத்திருந்த சுந்தர்.சியின் ‘அரண்மனை’ படம் உட்பட எல்லாப் படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்த வேகத்தில் ஆனால் சிம்புவை திருமணம் செய்யப்போகிறேன் என்று சொன்னவுடன் ஹன்ஷிகாவுக்கு வேறு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் ஹன்ஷிகாவை விட அவரது அம்மா தான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார். மகளை கூப்பிட்டு சிம்புவைப்பற்றி தான் விசாரித்த ‘நல்ல’ பல விஷயங்களை எடுத்துக் கூறி அவரது காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதோடு அவரது மனதையும் மாற்றினார்.

என்ன ஆச்சரியம் சிம்புவுடன் இனி எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று ஹன்ஷிகா அறிவித்த அடுத்த நாளே இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு வந்ததாம்.

ஆர்யாவுடன் மீகாமன், விக்ரமுடன் ராஸ்கல் என இரண்டு மெகா பெட்ஜெட் படங்களில் கமிட்டாகியிருக்கிறாராம் ஹன்ஷிகா.

அதுபோக இன்னும் நான்கைந்து தமிழ்ப் படங்களையும் அவரது கால்ஷீட் டைரியின் குறித்து வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் கமிட்டாகியுள்ள படங்களையும் சேர்த்தால் மொத்தம் பத்துப் படங்கள் என் பாக்கெட்டில் உள்ளன என்று நிம்மதியாகிறார் ஹன்ஷிகா. அதுமட்டுமா முன்பை விட இப்போது தான் நான் சந்தோஷமாகவும், பிஸியாகவும் இருக்கிறேன் என்கிறார்.

அவ்ளோ டார்ச்சரா பண்ணினார் சிம்பு?

தனுஷை திருப்திபடுத்தாத அமலாபால். சுரபி கிளுகிளுப்பு........

தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி' படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் திடீரென இன்னொரு கதாநாயகியை படத்தில் இணைத்து அந்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் அமலாபால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனுஷ் தன்னுடைய Wunerbar Films’.நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்து வரும் 'வேலையில்லா பட்டாதாரி' படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மற்றும் சதீஷ் உள்பட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கிட்டத்தட 80% முடிந்துவிட்டது. இந்நிலையில் எடுக்கப்பட்ட வரை உள்ள காட்சிகளை போட்டு பார்த்த தனுஷ் மற்றும் இயக்குனர் வேல்ராஜ், க்ன்ச கலந்து பேசி இந்த படத்தில் மற்றொரு நாயகியை இணைத்து அவருக்கு சில முக்கியமான காட்சிகள் வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அமலபால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமலாபாலின் நடிப்பு மற்றும் கவர்ச்சி காட்சிகள் படத்தில் திருப்திகரமாக இல்லாததால், இந்த அதிரடி முடிவுக்கு வந்ததாக தனுஷ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. படத்தில் நடிக்கவிருக்கும் அந்த இன்னொரு கதாநாயகி யார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவர்தான் நடிகை சுரபி. இவன் வேற மாதிரி படத்தின் ஹீரோயின்

தமன்னாவின் நெருக்கமான.....!

தமன்னாவும், பாலிவுட் ஹீரோயின் இஷா குப்தாவும் நெருக்கமான தோழிகள் ஆயினர். ஹீரோயின்களுக்கு இடையே நட்பு என்பது அத்திபூத்ததுபோல்தான். படங்களில் நடிக்கும்போது சந்தித்தாலும் காட்சி முடிந்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வரை த்ரிஷாவும், நயன்தாராவும் கீறியும் பாம்புமாக இருந்தனர். சமீபத்தில்தான் இருவரும் மனம் ஒத்த தோழிகளாக மாறினர். இந்த நிலைமை பாலிவுட்டிலும் எதிரொலிக்கிறது. சக ஹீரோயின்களை சரமாரியாக விமர்சிப்பது சகஜம். கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு கவனத்தை திருப்பி இருக்கும் தமன்னாவுக்கும் நெருக்கமான பாலிவுட் தோழிகள் யாரும் அமையவில்லை.

ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் தமன்னா நடித்து வருகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக இஷா குப்தா நடிக்கிறார். தற்போது இருவரும் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டனர். ஷூட்டிங் முடிந்தவுடன் ஷாப்பிங், ரெஸ்டாரன்ட் என்று ரவுண்ட் செல்கின்றனர். ஷூட்டிங்கில் இருவரும் இருந்தால் அரட்டை கச்சேரி நடத்துகிறார்கள். காட்சி முடிந்ததும் அருகருகே அமர்ந்து இடைவிடாமல் பேசுவதுடன் பேஸ்புக்கில் வரும் ஜோக்குகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இருக்கும் இடத்தில் பலமாக சிரிப்பு சத்தம் கேட்கிறது. இஷாவுடன் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்ட நெருக்கமான ஸ்டில்லை சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார் தமன்னா.

நஸ்ரியா இலங்கை பெண்ணா....!

புதிய பாதை படத்தில் இயக்குனர்-நாயகன் என்ற இரண்டு விதமான முகத்துடன் என்ட்ரி ஆனவர் பார்த்திபன். அதையடுத்து தொடர்ந்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தான் இயக்கி நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால், அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனபோதும், அவருக்குள் இருந்த இயக்குனர் அவரை துரத்திக்கொண்டேயிருந்ததால், ஜன்னல் ஓரம் படத்தில் பஸ் டிரைவராக நடித்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில்கூட நடிக்கவில்லை. திரைக்குப்பின்னால் டைரக்டராக மட்டுமே இருக்கிறேன் என்று அப்படத்தின் தொடக்க விழாவின்போது தெரிவித்த பார்த்திபன், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அதன்பிறகு என்ன நினைத்தாரோ, தனது மகள் கீர்த்தனாவை முக்கிய வேடமொன்றில் நடிக்க வைத்தவர், விஜயசேதுபதியை கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், இப்போது மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளையும் அவர் நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ, ஆர்யா.அமலாபால் ஆகியோர் நடிகராகவே நடிக்கிறார்கள்.

மேலும், நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா, இலங்கையில் இருந்து வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறாராம். இதுதவிர இன்னும் சில பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

விஷால் படத்தையெல்லா தயாரிக்க முடியாது: ஆர்.பி.செளத்ரி!

தமிழ் சினிமாவில் 80-க்கும் மேற்பட்ட புதுமுக டைரக்டர்களை அறிமுகம் செய்தவர் ஆர்.பி.செளத்ரி. ஆனால், சமீபகாலமாக பெரும்பாலான படங்கள் வசூல்ரீதியாக திருப்திகரமாக இல்லாததால் அதிகப்படியான படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனால் விஜய் நடித்த ஜில்லா படத்தை தமிழில் தயாரித்த அவர், தற்போது தெலுங்கு, மலையாளத்தில் படங்கள் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜில்லாவைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் படத்தை முதலில் தயாரிப்பதற்காக ஆர்.பி.செளத்ரியைத்தான் அணுகினார்களாம். ஆனால், இவர்கள் கொடுத்த பட்ஜெட் 28 கோடி என்றதும் ஆடிப்போய் விட்டாராம் அவர். அப்போது பட்ஜெட்டில் டைரக்டருக்கு எவ்வளவு சம்பளம் போட்டிருக்கிறது? என்று கேட்டவரிடத்தில் 28 கோடி என்று சொன்னதும், 8 கோடி பட்ஜெட்டில் வேண்டுமானால் படம் தயாரிக்கிறேன். 28 கோடிக்கெல்லாம் என்னால் படம் தயாரிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.

அதன்பிறகுதான் இந்த பட்ஜெட்டைக்கொண்டு எந்த தயாரிப்பாளரிடம் சென்றாலும் இதேமாதிரி கமெண்டுகள்தான் வந்து கொண்டிருக்கும் என்று முடிவெடுத்த விஷால், நான் நடிக்கிற படத்தை நானே தயாரிக்கிறேன் என்றாராம்.

Recent Post

events
 

Copyright © 2011. தமிழ் சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by
Proudly powered by Blogger