இந்த ஆண்டின் சூப்பர் நாயகி?

2013ஆம் ஆண்டு காஜல் அகர்வாலுக்கு ‘அழகுராஜா’, அனுஷ்காவிற்கு ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய 3 படங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்த நயன்தாராவுக்கு ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’, த்ரிஷாவிற்கு ‘சமர்’, ‘என்றென்றும் புன்னகை’, ஹன்சிகா மோத்வானிக்கு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’, ‘பிரியாணி’ ஆகிய 3 படங்கள், ‘கும்கி’ மூலம் அதிரடியாக தமிழ் சினிமாவில் பிரவேசித்த லக்ஷ்மி மேனனுக்கு ‘குட்டிப்புலி’, ‘பாண்டியநாடு’, திடீர் புயலாக வீசிய நஸ்ரியா நசீமிற்கு ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடத்தின் ‘டாப் ஹீரோயின்’ இடத்திற்குப் போட்டி போடுபவர்கள் இந்த 7 பேர்தான்.

இவர்களில் மற்றவர்களை ஓரம் கட்டி முதல் இடத்தைப் பிடித்திருப்பது நயன்தாராவே. 2010ம் ஆண்டில் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு நயன்தாரா தமிழில் நடிக்கவே இல்லை. இடைப்பட்ட இந்த 3 ஆண்டுகளில் நயன்தாரா விட்டுச்சென்ற இடம் அவருக்காகவே காத்திருந்தது என்பது அவர் நடித்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ படங்களின் வெற்றியைப் பார்த்தாலே தெரிகிறது. அதிலும் ‘ராஜா ராணி’ படத்தின் ரெஜினா கேரக்டர் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து படத்தின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருபுறம் ‘ஆரம்பம்’ படத்தில் சீனியர் ஆக்டரான அஜித்துடன் நடித்து, மறுபுறம் ‘ராஜா ராணி’ படத்தில் இளையதலைமுறை நடிகரான ஜெய்க்கும் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. ஆனால், இரண்டு தலைமுறைக்கும் தன்னால் பொருந்தமுடியும் என்பதை தான் ஏற்றிருந்த மாயா, ரெஜினா கேரக்டர் மூலம் நிரூபித்து 2013ல் ‘மனதை மயக்கிய நாயகி’ பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் நயன்.

Share |
Previous Page Next Page HOME