இந்த ஆண்டில் சினிமாவை அழகாக்கிய அழகிகள்


காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது.

என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.

ஹன்சிகா
சிம்புவுடன் காதல், பின்பு பரிவு, ஆந்திரத்து ஹீரோவுடன் புது காதல், அம்மாவுடன் கருத்து வேறுபாடு என ஆயிரம் கிசுகிசுவில் சிக்கினாலும் ஹன்சிகா தன் படங்களில் தீவிரம் கவனம் செலுத்தினார். அதனால் இந்த ஆண்டு சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி என 4 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் சேட்டை தவிர மற்ற அனைத்தும் அவருக்கு வெற்றிப் படங்கள்தான்.

அனுஷ்கா
ஆறடி அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் என மூன்று படங்கள். அவரைப் பொறுத்தவரை மூன்றுமே சரியாக அமையவில்லை. அலெக்ஸ் பாண்டியன் பிளாப், இரண்டாம் உலகம் பட்ட கஷ்டமெல்லாம் பாழாய்ப்போன படம். சிங்கம் 2 ஹிட்டானாலும் அவரது கேரக்டர் பேசப்படவில்லை.

நயன்தாரா
நயன் நடிச்சது இரண்டே படம்தான். இரண்டுமே ஹிட்டு, அவர் காட்டில் பெய்தது துட்டு மழை. ராஜாராணியில் ரொமான்ஸ், ஆரம்பத்தில் ஆக்ஷன் கிளாமர்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடினார்.

நஸ்ரியா
நேரம் படத்தின் மூலம் வந்த நல்ல நேரம் நஸ்ரியாவுக்கு எல்லாமே ஜெயம்தான். ராஜாராணியில் இமேஜ் எகிற நய்யாண்டியில் கொஞ்சம் இறங்கியது. சின்ன தொப்புள் பிரச்சினையை பெருசாக்க இண்டஸ்ட்ரி அவரை பார்த்து பயந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.

த்ரிஷா
சினிமாவுக்கு வந்து பத்து வருஷமானலும் இப்பவும் பிரிஜ்லேருந்து எடுத்த ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறார். சமர் கைவிட்டது. என்றென்றும் புன்னகை அவருக்கு புன்னகையை கொடுத்தது.

லட்சுமி மேனன்
இன்றைய தேதிக்கு ராசியான நடிகையா இருக்கிறவர் இவர். லட்சுமியின் தேதிக்காக பணப்பையுடன் வீட்டு வாசலில் ரேஷன் கடை கியூதான். இந்த ஆண்டு நடித்த குட்டிப்புலி, பாண்டியநாடு இரண்டுமே லட்சுமியிடம் லட்சுமியை குவித்தது.

டாப்ஸி
வெள்ளாவி பொண்ணுக்கு இந்த வரும் இரண்டு படங்கள்தான் கிடைத்தது. இரண்டிலுமே இணை ஹீரோயின்தான். ஆரம்பம், மறந்தேன் மன்னித்தேன். டாப்ஸி டாப்புக்கு வர இன்னும் கடுமையா உழைக்கணும்.
ப்ரியா ஆனந்த்: எதிர்நீச்சல் நல்ல இடத்தை கொடுத்துது. வணக்கம் சென்னையில் அதை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார்.

பிந்து மாதவி
கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஹிட்டாக பிந்து பிசியாகிவிட்டார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஹிட்டாக வருத்தப்படாத நடிகைகள் சங்கத்தில் இணைந்து விட்டார்.


Share |
Previous Page Next Page HOME