உண்மையிலேயே சூப்பர்ஸ்டார் அஜீத்தான்: அருண் விஜய்



தமிழ் சினிமாவில் நல்ல திறமைகள் இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிப்பவர்கள் பலர். அவர்களில் அருண்விஜயும் ஒருவர். அவர் அறிமுகமான காலகட்டங்களில் வந்தவர்கள் எல்லாம் இன்று முன்னனி இடத்தில் இருக்கிறார்கள்.ஆனாலும் மனம் தளராமல் போராடி வருகிறார் அவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தற்போது சிவஞானம் இயக்கத்தில் ‘வா டீல்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இதுபுறமிருக்க திடீரென கௌதம் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா? என கேட்கவும் கொஞ்சம் தாமதிக்காமல் ‘சட்’டென்று ஓ.கே. சொன்னார் அருண் விஜய்.

அதன் பின்னர் அஜித்துடன் ஷூட்டிங் கலந்து கொண்ட அனுபவங்களை அவ்வப்போது டுவிட்டரில் சொல்லிக் கொண்டே இருக்கிறார் அருண்.  இந்நிலையில் அஜித் பற்றி லேட்டஸ்டாக ஒரு ட்வீட்டில் ‘‘நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பக்கத்திலிருந்து உணர்ந்திருக்கிறேன்... அவர் உண்மையிலேயே சூப்பர்ஸ்டார்தான்! எனக்கு நிஜமான இன்ஸ்பிரேஷன் அவர்தான்! எதையுமே அவர் பொய்யாக செய்வதில்லை! அவருடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கிறேன்! அஜித்!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.



Share |
Previous Page Next Page HOME