சிவகார்த்திகேயனுக்கு எதிராக களம் இறங்கும் தனுஷ்

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துவந்த தனுஷுக்கு வேலையில்ல பட்டதாரி தனி அடையாளமே கொடுத்துள்ளது என்பது உண்மை.

அதற்கு முன் அவரின் அனுபவம் சற்று கசப்பானதே.சிவகார்த்திகேயனை வைத்து டாணாவை தயாரித்துவருகிறார் என்பது தெரிந்ததே. அந்த சமயம் வேலையில்லா பட்டதாரி ரிலீஸாவதற்கு தயார் நிலை. வியாபாரம் பேச சென்றால் டாணாவை பற்றியே பேச்சு எங்கு சென்றாலும். டாணாவை கொடுத்தால் உங்க படத்தை வாங்க தயார் என்ற பதில் சிலரிடமிருந்து. அதுமட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் சிவகார்த்தியனை பற்றியே இவரிடம் பேச வெறுத்தே போனார் மனுஷன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு பேர் நட்பிலும் கரையான்களை அவிழ்த்துவிட்டவர்கள், கிட்டதட்ட அந்த பிரண்ட்ஷிப்பை முடிவுக்கே கொண்டு வந்துவிட்டார்கள். இப்படி போய்கொண்டிருந்த அவரது சினிமா மார்க்கெட்டை வேலையில்லா பட்டதாரி தூக்கி நிறுத்தியுள்ளது என்பது நிஜம். இப்போது சிவகார்த்திகேயனின் நேரடி எதிரிகளோடு உறவாட ஆரம்பித்துவிட்டாராம் தனுஷ்.

இப்போது விசயம் என்னவென்றால் தற்போது தனுஷ் தயாரித்து வரும் காக்கிசட்டை (டாணா) படத்தை வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்த நிலையில் இவர் நடித்து வரும் அனேகன் படமும் முடிகிற நிலையில் இருக்கிறது. காக்கி சட்டை எப்போ திரைக்கு வருதோ, அதே நாளில் நம்ம அனேகனை ரிலீஸ் பண்ணுங்க என்பதுதான். ஆரம்பத்தில் ஏதோ சும்மா சொல்கிறார் என்று நினைத்த பலருக்கும் அதிர்ச்சி. இந்த விஷயத்தில் ரொம்பவே சீரியஸ் ஆக இருக்கிறாராம் அவர். அனேகன் பட நிறுவனத்திடம் அவர் வைத்திருக்கும் முக்கிய கோரிக்கையே இதுதான் என்கிறார்கள்.

Share |
Previous Page Next Page HOME