விக்ரமிற்கு மட்டும் சம்மதம் தெரிவித்த சார்மி

தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற அவர் அங்கு முன்னனி நடிகை இடத்தை பிடித்தார். இவர் தற்போது தமிழ் படம் ஒன்றில் வருகிறார். அதுவும் குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளாராம். கோலிசோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில்தான் குத்தாட்டம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளாராம். தமிழ் படங்களை தொடர்ந்து மறுத்து வந்த சார்மி, விக்ரமிற்காக மட்டும் இப்பாடலில் ஆட சம்மதித்துள்ளார்.

இப்பாடலுக்காக படக்குழு ரூ 2.5 கோடி வரை செட் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME