அரண்மனை விமா்சனம் aranmanai review


கலகலப்பு படத்தின் மூலம் நாம் அனைவரும் வயிறு வலிக்கிற அளவுக்கு சிரித்து மகிழ்ந்தோம். அதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அரண்மனை. காமெடி கலந்த த்ரில்லா் படம். நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி கலக்கியுள்ளது. பிறகேன்ன!! சி்பபலைக்கு பஞ்சமே இருக்காது.

தங்களது பூர்வீக சொத்தான அரண்மனை ஒன்றை விற்பதற்காக ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் முடிவு செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.


இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.
அரண்மனைக்குள் நுழைந்ததும் ஆன்ட்ரியாவின் உடம்புக்குள் பேயாக ஹன்சிகா புகுந்துகொள்ள அழகான அரண்மனைக்குள் அமானுஷ்யம் புகுந்து கொள்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் சுந்தர்.சி. ஹன்சிகா யார்? எதனால் அவர் இப்படி ஆன்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்திருக்கிறார்? ஆன்ட்ரியாவை அந்த பேயின் பிடியிலிருந்து சுந்தர்.சி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிப்படம்.

சுந்தர்.சி அண்ணன் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் வினய். இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை. ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா.

சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


ஃபிளாஸ்பேக் கதை என்னனா?

வினய்யை காதலிக்கும் ஹன்சிகா கிராமத்து பொண்ணாக வருகிறார். கிராமத்து கோயில்ல கொள்ளையடிக்கிறார்கள். இந்த கொள்ளை கும்பலை ஹன்சிகா பார்த்து விடுகிறார். ஊா்ப் பெரிய மனுஷங்க தான் இந்த கொள்ளைகார கும்பல். இதனால் பெரிய மனுஷங்க 4 பேரும் ஹன்சிகாவை கொலை செய்து விடுகிறார்கள். வினய்கும் ஆண்ட்ரியாக்கும் திருமணம் நடந்து விடுகிறது.  இதனால் தான் ஹன்சிகா பேயாக மாறி அரண்மனைக்குள் வருகிறார்.

எப்படியாவது வினய் கூட சோ்ந்து விட்டால் நிரந்தரமாக அவா் கூடவே இருக்கலாம் என்ற பிளானுடன் பேயாக ஹன்சிகா வலம் வருகிறார். அதுவும் சூரிய கிரகணத்து அன்று வினய்யை அடைய துடிக்கிறது பேய். இதை தடுப்பதற்காக பூசாரி மற்றும் சுந்தா்.சி கும்பல் முயற்சி செய்கிறார்கள்.

சந்திரமுகி படம் போல மலையாள மாந்திரி வந்து சந்திரமுகி ஜோதிகா வடிவில் இருக்கும் பேயை விரட்டிகிற மாதிரி தெரிகிறதே!! இயக்குநா் சுந்தா்.சி.

ஹீரோவான வினய் 3 நாயகிகளுடன் ஆட்டம் போடுவது நமக்கே பொறாமை தான் வரும். அட! ஒருத்தா் கூட கடலை போட்டாலே கடுப்படிக்கும். இதல 3 போ்.

லட்சுமிராய் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். இவா் கறிவேப்பிலை மாதிரி சும்மா வந்துட்டு போறார். கிளாமர்ல காட்டு காட்டுனு கலக்கி உள்ளார்.

ஹன்சிகா பின் பாதி நாயகி. அப்பாவியான கிராமத்து ரோல். அவருடைய கிளாமா் கெட்டப் மிஸ்ஸிங்க இந்தபடத்தில். அவருடைய பேன்ஸ்ங்க மத்தியில் பெருத்த ஏமாற்றம். ஹன்சிகாவிடம் ஒரு கேள்வி. என்னனா? இரண்டு வருடம் கழித்து வந்து வினயை அடைய நினைப்பது எப்படி நியாயம். அதுவரை பேய் தூங்கிட்டிருந்தா. வினய் கல்யாணம் பண்ணனும் போது ஏன் தடுக்கலை?

இதல்லம் விடுங்க!! நாம் லிப் லாக் பேரழகி இருக்கும் போது நமக்கென்ன கவலை. அதாங்க!! நம்ம ஆண்ட்ாியா தான். க்ளைமாஸ் சீனில் வினயை ரேப்ப பண்ணவரும் அவருடைய திறமைக்கு ரசிகா்களின் ஆதரவு அதிகம். அந்தளவுக்கு ரேப்பிங்கள பின்னிட்டாங்க...!! ராவணா தோற்றான் போங்க.

காமெடி திலகம் சூப்பா் ஸ்டார் சந்தானம் படம் முழுவரும் வந்து பஞ்ச டயலாக்கில் கலக்கிறார்.


பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை காமெடி படங்களில் வெற்றி கண்டு வந்த இயக்குனர் சுந்தர்.சி, இப்படத்தில் காமெடியுடன் திரில்லரையும் சேர்த்து வெற்றி கண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து காமெடி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். அரண்மனை செட்டை அருமையாக அமைத்த கலை இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை’ த்ரில்லா் காமெடி பங்களா!!!

tags: அரண்மனை விமா்சனம் aranmanai review, aranmanai previews, aranmanai stills, தமிழ் சினிமா செய்திகள்

Share |
Previous Page Next Page HOME