தல, தளபதியுடன் மோதி சாதனை படைத்த ஸ்டண்ட் மாஸ்டர்

தல, தளபதி என ஒரே நேரத்தில் இருவருடனும் மோதி சாதனை படைத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.

விஜய் நடித்த ஜில்லா படத்திலும், அஜீத் நடித்த வீரம் படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. விஜய்யுடன் வரும் ஓபனிங் சண்டையில் படு ஆக்ரோஷமாக மோதிய இவர் அஜீத்துடன் இரண்டாம் பாதியில் சண்டை போட்டிருக்கிறார்.

அஜீத்துடன் சண்டை போடுவது மிகவும் எளிதானது என்றும் ஆனால் விஜய் ஸ்பீடுக்கு ஈடுகொடுத்து சண்டைக்காட்சிகளில் நடிப்பது கொஞ்சம் சிரமம் என்று கூறிய சில்வா, தல இப்பொழுதெல்லாம் எங்களை விட ரிஸ்க் எடுக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

விஜய் படப்பிடிப்புக்கு வந்தால் தானுண்டு தன் வேலையுண்டு என அமைதியாக இருப்பவர் என்றும் ஆனால் தல ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து கொண்டே இருப்பார் என்றும் இருவருடனும் நடித்தபோது கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

மாஸ்டர் வித்யூ ராமன், மாஸ்டர் பிரதீப் ரவாத் ஆகிய இவருடைய இரண்டு உதவியாளர்களும் தல, தளபதியுடன் மோதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share |
Previous Page Next Page HOME