எனக்கு இலியானா தான் வேண்டும்: ரவிதேஜா

ரவிதேஜா, இலியானா நடித்து தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான படம் கிக். இந்த படத்தில்ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். மிகபெரிய ஹிட் ஆகிய இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளிவந்து தயாரிப்பாளருக்கு சுமார் 30 கோடி லாபம் சம்பாத்தித்து கொடுத்தது. இந்த படத்தை தமிழில் ஜெயம் ரவி, தமன்னா நடித்து தில்லாலங்கடி என்ற பெயரில் வெளிவந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஆர்.வெங்கட் இயக்குகிறார். ஆனால் கதாநாயகியாக இலியானாவுக்கு பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் ஆலோசனை தெரிவித்திருந்தாராம். ஏனெனில் கிக் படம் எடுத்துக்கொண்டிருந்தபோதே இலியானாவுக்கும் இயக்குனருக்கும் பயங்கர லடாய். இவர்கள் இருவரையும் படப்பிடிப்பில் சமாதானம் செய்து வைக்கவே ரவிதேஜாவுக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்க வேண்டுமா? என நினைத்து இந்த படத்தின் ஹீரோயினியாக இலியானாவுக்கு பதில் சமந்தாவை புக் செய்யலாம் என இயக்குனர் ஐடியா கொடுத்தாராம்.

ஆனால் ரவிதேஜாவோ கிக் இரண்டாம் பாகம் எடுத்தால் இலியானாதான் ஜோடி. வேறு நடிகையை ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் எனக்கு பதில் வேறு நடிகரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டாராம். அப்படியென்ன இலியானாவுக்கும் ரவிதேஜாவுக்கு கெமிஸ்ட்ரி என்று புரியாமல் வேறு வழியில்லாமல் இலியானாவுடன் சமாதான தூது விடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

Share |
Previous Page Next Page HOME