மகள் ஸ்ருதி ஹாசனை கழட்டிவிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Shruti-Hasan-Cute-photo-4சுருதி ஹாசன் கடுமையான வயிற்று வலி காரணமாக இதனால் ஜூப்ளி ஹில் பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு குடல் வால்வு பிரச்சினை இருந்த்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது ஒய்வு எடுத்து வருகிறார்.

விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் கமலஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகள் வேடத்திற்கு மகள் சுருதிஹாசனையே நடிக வைக்க முடிவு செய்யபட்டது. தற்போது இந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஒரு புதியமுகத்தை நடிக்க வைக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் கூறும் போது தந்தை என்ற நிலையில் எனக்கு வருத்தமாக உள்ளது. எங்கள் தேதிகள் ஒத்துவரவில்லை.ஆனால் இது இருவகையில் நல்லது. ஆரம்பத்தில் எங்கள் இருவர் மீது அழுத்தம் இருந்தது.ஒரு வேளை அவருக்கு அது அதிக அனுபவம் தருவதாக இருக்கலாம் என எண்ணிணேன். எனது மகள் கேரக்டருக்கு நடிக்க 3 பெண்களை தேர்வு செய்து வைத்துள்ளோம். எனது மகன் கேரக்டருக்கு நடிக்க புதிய முகம் ஒன்றை தேர்வு செய்து வைத்து உள்ளோம்.

நம்மை சுற்றி நடிப்பு திறமை அதிகம் உள்ளது.ஆனால் நாம் எல்லோரும் நமக்கு தகுந்தாற் போல் எடுத்து கொள்கிறோம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share |
Previous Page Next Page HOME