ஜில்லா, விஜய்க்கு இன்னொறு சுறா.

உலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆகிய ஜில்லா படம் பொதுவான ரசிகர்களிடையே நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்றுருப்பதால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 6 மணிக்கே சென்னையின் சில தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் ரசிகர்களுக்காக காண்பிக்கப்பட்டன. ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் உள்ளே போன போது இருந்த உற்சாகம் இல்லை. ஒன்றரை மணிநேரத்தில் நறுக்கென்று கதை சொல்லும் ஹாலிவுட் படங்கள் பார்த்து பழகிவிட்ட நம் ரசிகர்கள் ஜில்லா படம் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடுவதை கண்டு வெறுப்படையத்தான் செய்தார்கள் என்பதுதான் உண்மை

அதுவும் இரண்டாம் பாதியில் விஜய் போலீஸாக மாறியபின் படம் ஜவ்வாக இழுக்கிறது. விஜய்யின் இளவட்ட ரசிகர்கள் மட்டுமே தியேட்டரில் துள்ளி குதித்து ஆடினர். மற்றவர்கள் படத்தை பார்த்து நெளிந்தனர். சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் படத்தை பற்றிய விமர்சனங்கள் வந்தபோது 90% நெகட்டிவ் விமர்சனங்கள்தான் வந்தது. எல்லோரும் கூறிய குறை படத்தின் நீளம். சுமார் 189 நிமிடங்கள், அதாவது மூன்று மணி நேரத்திற்கும் மேல் படம் ஓடுகிறது.

அடுத்தது கதை. தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பார்த்து புளித்து போன அரதப்பழசான கதை. தேவைக்கும் அதிகமான காமெடி காட்சிகள். அதிலும் காஜல் அகர்வாலை காமெடி ஹீரோயினியாக மாற்றியது என படத்தில் பல மைனஸ்கள். முதல் நாளிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி படத்தின் நீளத்தை குறைக்க அதிரடியாக முடிவெடுத்துவிட்டார். நேற்று இரவுக்காட்சி முதல்  படத்தின் நீளம் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. ஆனாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை பெறுவது சந்தேகம்தான். ஜில்லா, விஜய்க்கு இன்னொறு சுறா.

Share |
Previous Page Next Page HOME