நான் வாங்க பழகலாம் டைப்… திவ்யதர்ஷினி !!

வாய் ஓயாத பேச்சு.... நொடிக்கு நொடி சிரிப்பு என தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றிவிடுவார் திவ்யதர்ஷினி. இப்போது ஜோடி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல தம்பதியரை வெட்கப்பட வைக்கிறார். அவ்வப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். 
 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமலிடம் முத்தம் வாங்கி சர்ச்சையில் சிக்கினார். தொலைக்காட்சி ரசிகர்களால் செல்லமாக டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தன் பயணங்கள் குறித்து ஒரு பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி.. 
'நான் பிறந்தது கீழ்ப்பாக்கம். ஆனா, என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்கள் எல்லாமே அண்ணா நகர்ல இருக்கும்போதுதான் நடந்துச்சு.
 
நான் டேக் இட் ஈசி பாஸிசி டைப் அதான் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் டி.வி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானேன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அது நீடிக்கிறது. 
 
விஜய் டிவியில்தான் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கிறேன்.
நிகழ்ச்சிக்கு வர்ற கெஸ்ட் எல்லோரையும், நம்ம வீட்டுக்கு வந்தா எப்படி உபசரிப்போமோ அதே மாதிரி நான் ட்ரீட் பண்றேன். அதான் நிகழ்ச்சியோட சுவாரஸ்யம் கூடுது. 
எல்லோரும் வாங்க பேசலாம்னு சொன்னா நான் வாங்க பழகலாம்னு சொல்ற டைப். அதான் எல்லோருக்கும் என்னை பிடிக்க காரணம்.
 
ஒரு நிகழ்ச்சியில கமல்கிட்ட முத்தம் வாங்கினதுக்காக கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் கம்ப்ளைன்ட் போச்சு. முத்தம் பற்றி முத்த ஸ்பெஷலிஸ்ட்டான கமல் சார் கிட்டதானே பேசமுடியும்.
 
6 வயசு பாப்பா முதல் 60 வயசு பாட்டி வரைக்கும் கமல் பிடிக்கும். அன்பை வெளிப்படுத்தினது தப்பா? நிகழ்ச்சி சூப்பரா வர சுவாரஸ்யத்துக்கு ஏதாச்சும் செய்யறதுதான் என்னோட வேலை. தவிர கமலிடம் முத்தம் வாங்கினது என்னோட விருப்பம். எனக்கான லிமிட் என்னன்னு எனக்குத் தெரியும்.
 
என் கூட காம்பயர் பண்ண எல்லோரும் ஹீரோஆகிட்டாங்க. என்னோட ராசி அப்படி. எனக்குதான் சினிமா சரியா செட் ஆகலை.
 
நம்ம வீட்டுக் கல்யாணம் தொகுத்து வழங்குறதுனாலா எனக்கு எப்போ கல்யாணம்னு எல்லோரும் கேட்கறாங்க. நான் இன்னமும் சின்னப் பொண்ணுதான். கல்யாணம்னா கண்டிப்பா உங்களுக்குச் சொல்றேன்.

Share |
Previous Page Next Page HOME