சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன தமன்னா

எந்த வளரும் ஹீரோவும் முன்னனி நடிகைகளுடன் ஜோடி போட ஆசைப்படுவது இயல்புதான். அந்த வாய்ப்பு வந்தால் அட்டு ஹீரோ கூட லட்டு ஹீரோவாக மாறுவார் என்ற எண்ணம்தான். ஆனால் குறுகிய காலத்திலேயே முன்னனி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயனுக்கு அந்த ஆசை இருப்பது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

விசயம் இதுதான். லிங்குசாமி தயாரிக்கும் அடுத்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்குகிறார்.படத்திற்கு ரஜினி முருகன் என்று பெயரிட்டுள்ளனர். இசை இமான். இந்த படத்தில் சிவாவுக்கு எப்படியாவது முன்னனி நடிகையை ஜோடியாக்கிவிட வேண்டும் என்று முமுரமாக இயங்கினார் பொன்ராம். ஏற்கெனவே மான்கராத்தேவில் ஹன்சிகா ஜோடியானதற்கே பலபேர் ஜெலுசில் குடித்தார்கள் என்பது வேறு கதை. இந்த நிலையில் முதலில் சமந்தாவை நாடியதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தமன்னாவிடம் பேசினார்களாம். பையா படத்தில் நடிக்கும்போதே லின்குசாமியுடன் நல்ல நட்பில் இருந்தாராம் தமன்னா.அந்த உரிமையில் அவரை நாடினார்களாம். முதலில் சரி என்றவர் தற்போது நோ என்கிறார்களாம்.காரணம் சம்பள விசயம் என்கிறார்கள். இனி யாரை பார்ப்பது என்று படக்குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகிறார்களாம்.


Tag: sivakarthikeyan next movie news, rajini murugan movie stills,rajini murugan review,tmamana not intrest to act sivakarthikeyan movie,

Share |
Previous Page Next Page HOME