பாலாவின் டார்ச்சர்.... சிக்கியவர் ஸ்ரேயா.

பாலாவின் அடுத்த படமான கரகாட்டம் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரேயா உறுதி செய்யப்பட்டவுடன் அவருக்கான டார்ச்சர் பாலா மூலம் ஆரம்பமாகிவிடது. தனது ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் நடிகர், நடிகைகளை வறுத்தெடுக்கும் பாலாவிடம் இம்முறை சிக்கிக்கொண்டவர் ஸ்ரேயா என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

இந்த படத்தில் ஸ்ரேயாவுக்கு கரகாட்டக்காரி வேடம். ஸ்ரேயா ஏற்கனவே பரதநாட்டியத்தை முறைப்படி கற்று இருந்தாலும், அவருக்கு கரகாட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் பாலா படத்தில் எந்த காட்சியிலும் டூப் கிடையாது, உண்மையான கரகாட்டக்கார கலைஞர்கள் ஆடுவது போன்று தலையில் கரகத்தை வைத்து ஆடவேண்டும். எனவே அதற்கான பயிற்சியை மிகக்கடுமையாக ஸ்ரேயா எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.

தஞ்சையில் இருந்து அழைத்து வரப்பட்ட நிஜ கரகாட்டக்கலைஞர்களிடம் தற்போது கரகாட்டக்கலையை தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் பயிற்சி எடுத்து வருகிறார் ஸ்ரேயா. அவ்வப்போது பாலா பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்து ஸ்ரேயாவின் நடனம் குறித்து விசாரித்து செல்கிறாராம்.

இந்த படத்திற்காக இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் தயாராகிவிட்டது என்பது நாம் அறிந்ததே.

Share |
Previous Page Next Page HOME