எந்தப் படத்தைப் பார்ப்பது? குழப்பத்தில் ரசிகர்கள்

நாளை டிசம்பர் 20ல் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ஒரே நாளில் இத்தனை படங்கள் அதுவும் முக்கிய
நட்சத்திரங்கள், இயக்குனர்களின் படங்கள் வெளியாவதால் எந்தப் படத்திற்குப் போவது என்று ரசிகர்களிடையே சிறுகுழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான “பிரியாணி” திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது.இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெற்றியடைந்திருப்பதுடன் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படமென்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

ஜீவா,திரிசா,வினய்,ஆண்ட்ரியா நடிப்பில் ஐ.அகமது இயக்கியிருக்கும் ”என்றென்றும் புன்னகை” திரைப்படமும் நாளை வெளியாகிறது. இப்படத்தையும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்தனர்.

மேலும் அமீர்கான்,கத்ரீனா கைப் நடித்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட்படமான தூம் 3 படமும் நாளை வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய முன்னால் இயக்குனரான பாலு மகேந்திராவின் “தலைமுறைகள்” திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவருவதால் இப்படமும் எதிர்பார்க்கப்படும் ஒன்றே.

இத்தனை வெளியீடுகள் ஒரே நாளில் வெளிவருவதுடன், சென்ற வாரத்தில் வெளியான “ இவன் வேற மாதிரி “ திரைப்படமும் இப்படங்களுடன் போட்டியாக நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME