குப்புற விழுந்தாலும் மண் ஒட்டாமல் பேசுகிறார் ஹன்சிகா!

விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஹன்சிகா, தற்போது சிம்புவுடன் இரண்டு படங்களில் நடிப்பவர், அரண்மனை, மான்கராத்தே, உயிரே உயிரே ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இதில், உயிரே உயிரே என்ற படத்தில் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, புதுமுக நடிகருக்கும் ஜோடியாகியிருக்கிறார் ஹன்சிகா.

இதேபோல், தெலுங்கிலும் இப்போது அவரது முன்வரிசை இடத்தை வேறு சில நடிகைகள் அபகரித்துக்கொண்டதால் இரண்டாம் தட்டு ஹீரோக்கள் மற்றும் நரைமுடி நடிகர்களின் படங்கள்தான் ஹன்சிகா கைவசம் உள்ளதாம். ஆனபோதும், என் மார்க்கெட் இப்போதும் ஸ்டெடியாகத்தான் உள்ளது. நான் நன்றாக தூங்கியே 6 மாதமாச்சு. அந்த அளவுக்கு இரவு பகலாக படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறேன் என்று பில்டப் கொடுத்து வருகிறார்.

இதையடுத்து, உருப்படியான ஹீரோக்களின் படங்கள் எதுவுமே கைவசம் இல்லையே என்று சிலர் ஹன்சிகாவிடம் கேட்டபோது, நான் ஹீரோக்களுக்காக படங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருந்து மாறி ரொம்ப காலமாயிற்று.

காரணம், புதுமுக நடிகர் உதயநிதியுடன் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்தான் எனக்கு தமிழில் முதல் மெகா ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகுதானே ராசியான நடிகையானேன். அதனால், கதையே வெற்றிகளை தீர்மானிக்கின்றன என்பதால் கதைகளைப் பொறுத்தே படங்களில் கமிட்டாகி வருகிறேன் என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் ஹன்சிகா.

மேலும், என்னைப்பொறுத்தவரை விஜய் படமும் ஒன்றுதான் சிவகார்த்திகேயன் படமும் ஒன்றுதான். இந்த மனநிலை என்னிடம் ஏற்பட்டிருப்பதால்தான் சித்தார்த் என்ற புதியவர் நடிக்கும் உயிரே உயிரே படத்தை எந்த தயக்கமும் இலலாமல் தைரியமாக ஏற்று நடிக்கிறேன் என்று குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசுகிறார் ஹன்சிகா.

Share |
Previous Page Next Page HOME