மனம் உடைந்த மோகன் லால்!

இந்தியாவிலேயே அதிக மக்கள் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கேரளாவில் தற்போது நடைபெறுகிற சில சம்பவங்களை பார்க்கும்போது முதலில் சொன்ன கருத்து தவறோ என்று எண்ணத் தோன்றும். சமீபத்தில் இந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் குடும்பச் சண்டை காரணமாக அதிதி என்ற தங்களது ஆறு வயது மகளை அவளது பெற்றோரே கொடூரமாக தாக்க, படு காயமடைந்த அந்த சிறுமி இறந்து விட்டார்.

இது இப்படி என்றால், இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா என்ற இடத்தில் நடந்த இன்னொரு சம்பவம் மனதை பதற வைக்கும்படியாக உள்ளது. ஐந்து வயது ஷெஃபீக் என்ற சிறுவனை அவனது தந்தையும், அவனது இரண்டாம் தாயும் சேர்ந்து கொடூரமாக தாக்க, அவனது தலை பிளந்தவாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உயிருக்கு போராடி வருகிறான்.

இந்த இரண்டு சம்பவங்களும் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இந்த கொடூரமான செயல்களை கண்டித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தனது மைக்ரோ ப்ளாக்கில் மிகுந்த வேதனையோடு, ‘அச்சன்டெ சுடு கண்ணீர்’ (ஒரு தந்தையின் கண்ணீர்) என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

‘‘ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளை நோகடிக்காதே’’ என்று பொருள்படும் படி அவர் எழுதியிருப்பதை மலையாளம் படிக்கத் தெரிந்தவர்கள் படித்து பாருங்கள்! பிள்ளைகளை கொடுமைப்படுத்துவோர் நிச்சயம் மனம் திருந்துவர்!


Share |
Previous Page Next Page HOME