அயன் படம் வெளியான போது தமன்னா தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக திகழ்ந்தார். அதனைத்தொடர்ந்து விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் நாயகியாக வலம் வந்தார். ஏராளமான படங்களில் நடித்துள்ள அவருக்கு தமிழில் வீரம் படத்திற்கு பின் வாய்ப்புகள் இல்லை. எனவே வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிக்கலாம் என்று தமன்னா நினைத்தார். எனவே பையாவில் நடித்ததன் காரணமாக லிங்குசாமி தயாரிக்கும் ரஜினிமுருகன் படத்தில் நடிக்க தமன்னா வாய்ப்பு கேட்டாராம். அதனால் அவரே நடிக்க கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் நடந்தது வேறு .பொன்ராம் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் மார்க்கெட் இல்லாததை காரணம் கூறி தமன்னாவை ஓரம் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்குப்பதிலாக முன்னாள் மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். இந்த தகவல் தமன்னாவுக்கு சென்றபோது அதிர்ச்சியாகி விட்டாராம். சிவகார்த்திகேயனுடன் நான் நடிக்க ஒத்துக்கொண்டதே பெரிய விசயம். ஆனால் முதலில் என்னிடம் கால்சீட் கேட்டு விட்டு இப்போது வேறு நடிகை பக்கம் சாய்ந்து விட்டார்களே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
இப்படி சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படங்களில் இருந்தே தமன்னா நீக்கப்பட்டு விட்டதால், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகத்திலாவது நடிப்பாரா என்று கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள்

![]()