வீரம் படத்தை அடுத்து அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறாா் என்பது நாம் அறிந்த செய்தி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா என்ற இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான தலைப்பானது இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இந்த படமானது அஜித்தின் 55வது படம் என்பதால் தற்சமயம் பேஸ்புக் மற்றும் இணைய தளங்களில் கூட தல 55 என்று தலைப்பிட்டு மட்டும் சொல்லி கொண்டு வருகிறாா்கள்.
அஜித் கடைசியாக நடித்த இரண்டு படங்களுக்குமே தலைப்பு படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது என்றும் சொன்னார்கள். ஒரு வேளை அந்த சென்டிமென்ட் காரணமாகவே இந்த புதிய படத்திற்கும் தலைப்பு வைப்பதை தள்ளிப் போடுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
தல 55வது படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 75% முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் படத்தின் தலைப்பை அறிவிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்நாளில் படத்தின் தலைப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே ரசிகர்களை மீண்டும் ஏமாற்றாமல் இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.
tags: ajith news, ajith 55th film title, ajith next film news, ajith latest news,அஜித், தமிழ் சினிமா செய்திகள், தல அஜித் செய்தி
![]()



