தெலுங்கில் கிளாமராக கலக்கும் பூா்ணா


தமிழ் திரையுலகத்திற்கு நடிகை பூா்ணா “முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு” படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தாா். அவா் நடிப்பு உலகத்திற்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. இருந்த போதிலும் முன்னணி இடத்தை இன்னும் பிடிக்கவில்லை. அவா் நடித்த எந்த படங்களும் மிகப் பொிய வெற்றி அடையவில்லை. நம்ம இளைய தளபதி விஜய் கூட நடிகை பூா்ணாவை சின்ன அசின் என்று மனதார பாராட்டிள்ளாா். கந்தகோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னலோரம், தகராறு போன்ற படங்களை மிகவும் நம்பி கொண்டிருந்தாா். அந்த படங்களும் தோல்வி தான் தந்தது. பின் அதிரடியான முடிவுவை எடுத்தாா். அது தாங்க!! கிளாமராக நடிப்பது என்று. தெலுங்கில் கிளாமராக நடித்து முன்னணி நடிகைகள் வாிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளாா். தற்போது நடித்து முடித்த படம் அர்ஜுனன் காதலியும் இது வரை ரிலீசாகவில்லை. தமிழில் “படம் பேசும்” என்ற ஒரு படத்தை தவிர வேறு எந்தவொரு படமும் கைவசம் இல்லை.பொம்மதே பொன்னம்மா, ஒக்கசாரி அவனு ஒக்காசரி காது, பொம்பாலி என மூன்று தெலுங்கு படங்களில் நடித்து கலக்கி வருகிறார். மலையாளத்தில் மிலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் வாய்ப்பு குறைந்துள்ளது பற்றிக் கேட்டால் "நான் மொழிவாரியாக படங்களை பிரித்துப் பார்ப்பதில்லை எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு நடிக்கிறேன். தற்போதும் கையில் 5 படங்கள் வரை வைத்திருக்கிறேன். ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டும் இருக்கிறேன்" என்கிறார் பூா்ணா.

tags: latest poorna stills, poorna latest news, poora hot stills,

Share |
Previous Page Next Page HOME