ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வரும் கல்யாணி உடன் நடித்த நடிகரை பலமுறை கன்னத்தில் அடித்தாராம்.இந்த விஷயம்தான் சின்னத்திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிற விஷயம் . ஆனால் இந்த செய்தியை கல்யாணி மறுத்துள்ளார். "ஆண்டாள் அழகர் தொடரில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்னவென்றால், அழகராக நடிப்பரை நான் கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுத்தார்கள். வழக்கமாக கையை ஓங்கி கன்னம் வரை கொண்டு சென்று பிறகு எடுத்துவிடுவோம். பின்னணி இசையில் அடித்தது போன்று ஒலியை சேர்த்து விடுவார்கள். ஆனால் அழகர் என்னை நிஜமாகவே அடிக்கச் சொன்னார். அப்போதுதான் காட்சி நன்றாக வரும் நானும் நன்றாக எக்ஸ்பிரசன் காட்ட முடியும் என்றார். நான் தயக்கத்துடன் ஒத்துக் கொண்டு அப்படியே செய்தேன். அது பல டேக்குகள் போனதும் எனக்கு அழுகையே வந்தது. ஆனால் அவர்தான் தயங்காமல் அடிக்கச் சொன்னார். கடைசியில் அந்த காட்சி நன்றாக வந்துள்ளது. மற்றபடி நான் யாரையும் அடித்ததில்லை என்றார் கல்யாணி.
![]()



