அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இப்படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா என அஜீத்திற்கு இரண்டு நாயகிகள். ஆனால் தற்போது மூன்று கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா…? என்பதை படம் வந்த பிறகு தான் தெரியும்.
தல55 என அழைக்கப்படும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் படத்தில் அஜித்துடன், கமல் இணைய போகிறார் என்பதுதான். இந்த படத்தில் சில வசனங்களுக்கு மட்டும் குரல் கொடுக்க கமலை அணுக உள்ளனராம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கருமையான முடியுடன் இளமையான தோற்றத்தில் அஜீத் இப்படத்தில் தோன்றுகிறார் என்பதில் இருந்து ஒரு குழந்தையின் தந்தை கதாபாத்திரம் என தினமும் இப்படம் குறித்து ஏதாவது பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த பேச்சில் கமலின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. பொதுவாக கௌதம்மேனன் படம் என்றாலே அதில் நிச்சயமாக பின்னணியில் ஒரு குரல் கதையின் போக்கை விவரிப்பதாகக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில், அஜீத்தின் இந்த படத்திலும் படத்தின் போக்கை விவரிக்கும் குரல் ஒன்று ஒலிக்கப் போகிறதாம். அதை யாராவது பிரபலம் சொன்னால் நன்றாக இருக்கும் என எண்ணிய கௌதம்மேனன் கமலைத் தேர்வு செய்துள்ளாராம். அதுவும் ஒரு கம்பீரமான குரலாக இருந்தால் இன்னும் பெட்டராக இருக்கும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியதில் திருப்தியடைந்த கௌதம் மேனன் இப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், வரும் தீபாவளிக்கு படத் தலைப்பும், பாடலும் வெளியாகலாம் என்றும், படம் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது குறித்து கமலிடம் கௌதம்மேனன் பேசபோவதாக சினிமா வட்டாராத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
tags: kamal-haasan-give-voice-thala-55-ajiths, ajith news, ajith and kamal news, kamal news, ajith latest stills, ajith latest news, தமிழ் சினிமா செய்திகள், கமல், அஜித், கமல் அடுத்த படம், அஜித் அடுத்த படம்
![]()



