49 ஒ படம் வருமா? வராதா? பெல் நடிகருக்கு வந்த சோதனை



தமிழ் திரையுலகில் எவ்வளவு தான் காமெடி நடிகா்கள் வந்தாலும், கவுண்டமணியின் காமெடிகள் காலத்தாலும் அழியாத நகைச்சுவை உணா்வு
மிக்கவை. அந்த அளவிற்கு மக்களிடம் பொிதும் வரவேற்பை பெற்றது தான் கவுண்மணியின் காமெடிகள். இன்றைக்கும் தமிழ் சினிமாவில் கவுண்டமணியின் காமெடியை பின்பற்றாதவா்களே இல்லை என்று சொல்லாம்.

இவா் கொஞ்சம் காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்தாா். அவரை தேடிச்சென்று பல இயக்குநா்கள் மீண்டும் நீங்கள் சினிமாவில் நடிக்க வாருங்கள் என்று அழைத்த போது கூட அவர் முடியாது என்று கூறி தட்டி கழித்து வந்தாா். அந்த சமயத்தில்தான் 49 ஓ கதையை அவரிடம் சொன்னார் இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ். இந்த படத்தில் கவுண்டருக்கு விவசாயி வேடம். இந்த ஒரு விஷயத்திற்காகவே நடிப்பதற்கு ஓ.கே சொன்னார் கவுண்டர்.

இந்த படத்தில் வெறும் நகைச்சுவை மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் விவசாயத்தின் மேன்மையை பற்றியும் நிறைய பேசியுள்ளராம் கவுண்டர். இந்த படத்தை மற்றவர்களை விட அதிகம் எதிர்பார்ப்பதும் அவர்தான். எப்பவோ திரைக்கு வந்திருக்க வேண்டிய படம் அது. இன்னும் இன்னும்… என்று தள்ளிக் கொண்டே போகிறது. இந்த நேரத்தில் சும்மாயில்லாமல், இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் வெளிவந்த வானவராயன் வல்லவராயன் படத்தை விலைக்கு வாங்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. ஆனால் கூட்டிக்கழித்து பார்த்தால், ரெண்டு கோடி காலியாம்.

கவுண்டமணி,  ஏம்ப்பா… 49 ஓ ன்னு ஒரு நல்ல படத்தை எடுத்து வச்சுருக்க? அதை ரிலீஸ் பண்ணுறதை விட்டுட்டு வானவராயன், வவுத்துவலி ராயன்னு எறங்கி காச தொலைக்கணுமா என்றாராம் கோபமாக!

tags: goundamani, goundamani reaction, goundamani latest stills, goundamani latest news, latest tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள், கவுண்டமணி, goundamani news
 

Share |
Previous Page Next Page HOME