சுந்தா் சி படத்திலிருந்து யுவன் நீக்கம்


சுந்தா்.சி இயக்கத்தில் உருவான பல படங்களுக்கும் இசையமைத்தவா் யுவன் சங்கா் ராஜா என்பது நமக்கு தொியும். தற்போது சுந்தா்.சி - விஷால் கூட்டணியில் உருவாக்கி வரும் படம் ஆம்பள.

விஷாலும் யுவன் சங்கர் ராஜாவும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான். விஷாலின் அடுத்த படமான பூஜை, அவர் முதல் முதலாக தயாரிக்கும்
நாடகத்துக்குக் கூட யுவன்தான் இசை அமைக்கிறார். ஆனால் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ஆம்பள படத்திலிருந்து

வெளியேறியிருக்கிறார் யுவன். விஷயம் என்னன்னா? இந்த படத்திற்கு 5 இசையமைப்பாளா்களை களம் இறக்கியுள்ளாா் சுந்தா்.சி. ஆமாங்க!! யுவன் பதிலாக 5 இசையமைப்பாளர்கள் ஆம்பள படத்துக்கு இசையமைக்கின்றனர்.

முதன் முதலில் தமிழ் சினிமாவில் 5 இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்த பெருமை இயக்குநர் வசந்த்கே உாித்தாகும். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தின் மூலம் 5 பேர் வைத்து இசையமைக்க செய்தாா்.

இதே போல் இயக்குநர் பார்த்திபன், தற்போது வெளிவந்து சூப்பா் ஹிட் கொடுத்த படமான, கதை திரைக்கதை வசனம் இயக்கத்திலும் 5 இசை அமைப்பாளர்களைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.


யுவன் இந்த படத்திலிருந்து வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. சுந்தர் சிக்கும் இவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். எப்படி இந்த பிளவு ஏற்பட்டது என்றே தொியவில்லை. இவ்வளவுக்கும் சுந்தர்சியின் பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன்.

இன்னொரு முக்கியமான செய்தி!! என்னனென்றால், இந்த படத்திற்கு 3 புதிய இசையமைப்பாளா்களை  அறிமுகம் செய்கிறாா் சுந்தா்.சி. இப்போது ஆம்பள படத்தின் இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிமுகமாகிறார். ரஹ்மானின் உதவியாளர் ஒருவரும் இசையமைக்கிறார்.


tags: sundar c news, sundar c latest news, yuvan news, yuvan latest news, latest tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள், யுவன், சுந்தா் சி, யுவன் அடுத்த படம்

.

Share |
Previous Page Next Page HOME