சிம்புவின் படத்தை கைவிட்ட தனுஷ்?


சிம்புவின் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் கைவசம் தற்போது 4 படங்கள் இருந்தும் இந்த நிலைமை. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மனைவியின் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த திரைப்படம் ஒன்று திடீரென ட்ராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. சிம்பு நடித்த நான்கு படங்கள் வெளிவராமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிக்கலை சந்தித்து வருவதாகவும் இந்நிலையில் அவரை நம்பி படத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்றும் பிரபல தயாரிப்பாளர் கூறிய அறிவுரை காரணமாக படம் டிராப் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த தனுஷ், தற்போது தமிழ், இந்தி என பிசியாக இருப்பதால், இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என்ற முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த பெண் இயக்குனர் சிம்புவுக்கு பதிலாக ஜெய்யை வைத்து படமெடுக்க முடிவெடுத்துவிட்டாரம். தயாரிப்பாளர் அவருடைய கணவரேதான்.

தற்போது சிம்பு கவுதம் மேனன், பாண்டிராஜ் ஆகிய இயக்குனர்களின் படங்களும் எப்பொழுது வெளியாகும் என்றே தெரியவில்லை. ஏற்கனவே வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களும் பாதியில் நிற்கும் நிலையில் சிம்பு இது தேவையில்லாத ரிஸ்க் என்று உணர்ந்தே இந்த முடிவுக்கு தனுஷ் வந்ததாகவும் கூறப்படுகிறது.

Tag: simbu,dhanush,simbu latest news, simbu new movie,

Share |
Previous Page Next Page HOME