மீண்டும் விஜய் படத்தில் முருகதாஸ்


துப்பாக்கி வெற்றி அடுத்து, இந்த வெற்றி  கூட்டணி மீண்டும் கைகோா்த்து மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கத்தி. தற்போது இந்த படமானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கொஞ்சம் சிறு சிறு வேலைகள் பாக்கியுள்ளது. அதாவது பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்க வேண்டிய நிலையில் உள்ளது. செல்ஃபி புள்ள பாடல். இது விஜய் பாடிய பாடல். இதை பாடலுக்கான காட்சியை அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. பாஸ்ட் இந்த பாடல் காட்சியை லண்டனி்ல் எடுப்பதாக இருந்தது. தற்சமயம் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டு மும்பையில் 2.5 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப் பொிய செட் ஒன்றை அமைத்து அதில் படமாக்கவிருப்பதாக பரப்பரப்பான தகவல்கள் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கின்றனா்.

சாி விஷயத்திற்கு வருவோம். ஆமாங்க! இந்த பிரம்மாண்டமான செட் போட்டு நடைபெற உள்ள பாடல் காட்சியில் நம்ம இயக்குநா் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் கலக்க போகிறாராம். அதுமட்டுமில்லங்க! இவருடன் சோ்ந்து இன்னொருவரும் இந்த பாடல் காட்சியில் நடிக்கயுள்ளராம். அவரு வேற யாருமில்லங்க!!... நம்ம அனிருத்து தாங்க!!...

இதற்கு முன் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படத்தில் ‘கூகுள் கூகுள்’ பாடலில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன், முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்கள் என்பது நாம் அறிந்ததே.

tags: kaththi news, kaththi movie stills, vijay, a.r.murugadoss news

Share |
Previous Page Next Page HOME