யுவன் பெயர் மாற்றப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை: வெங்கட் பிரபு


1996-ல் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அப்படி தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த யுவன், சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரியாணி படத்தோடு 100 படங்களை கடந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென முஸ்ஸீம் மதத்துக்கு மாறினார் யுவன். மதம் மாறினாலும் யுவன் தனது பெயரை மாற்றாமல அதே பெயரிலேயே இசையமைத்துவந்தார்.ஆனால் தற்போது சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் இருந்து தனது பெயரையும் யுவன் மாற்றிக்கொள்ளப்போவதாக சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து யுவன் தரப்பில் எந்த செய்தியும் இல்லை. இ ந் நிலையில் மாஸ் படத்தின் இயக்குனரும்,யுவனின் சித்தப்பா கங்கைஅமரனின் மகனான இயக்குனர் வெங்கட்பிரபு இது குறித்து டிவிடரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, மாஸ் படத்தின் டைட்டில் கார்டடில் யுவன் ஷங்கர் ராஜாவின் பெயரை மாற்றப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share |
Previous Page Next Page HOME