நடிகர்- நடிகைகளின் மௌன உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது

சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும், தீர்ப்பு குறித்த வருத்தத்தையும்,உணர்வுகளையும் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் மவுன உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர், பெப்சி, சின்னத்திரை, திரையரங்கு உரிமையாளர் சங்கம், பி.ஆர்.ஓ., உள்ளிட்ட சங்கங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.


உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு இன்று அனைத்து சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தியேட்டர்களிலும் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நடந்து வரும் போராட்டத்தில் இளம் நடிகர் நடிகைகளை விட சீனியர் நடிகர்கர் நடிகைகளே அதிக பங்கேற்றுவருகின்றனர். சரத்குமார், ஸ்ரீகாந்த், ராதாரவி, கே.பாக்யராஜ், கே.டி.குஞ்சுமோன், ஆர்.வி.உதயகுமார், ராமராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, பி.வாசு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த போராட்டம் மௌன உண்ணாவிரதம் என்பதால் தொலைக்காட்சிகளுக்கு பேட்டுக்கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

Share |
Previous Page Next Page HOME