மெட்ராஸ் படத்தை மிஸ் பண்ணியது உண்மைதான்: ஜீவா

கார்த்தி, கேதரீன் தெரசா ஆகியோர் நடிப்பில்  வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'மெட்ராஸ்'. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜீவா. ஆம் காளி வேடத்தில் நடிக்க இயக்குனர் ரஞ்சித் முதலில் ஜீவாவைத்தான் அணுகினாராம். ஆனால் அவர் அந்த நேரத்தில் ரவி.கே.சந்திரனின் 'யான்' படத்தில் கமிட் ஆனதால் மெட்ராஸ் படத்திற்கு ரஞ்சித் கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரே ரஞ்சித் கார்த்தியை அணுகி அவரை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஜீவா, 'மெட்ராஸ் படத்திற்காக இயக்குனர் ரஞ்சித் என்னை அணுகியது உண்மைதான் என்றும், ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் கூறினார். இருப்பினும் மெட்ராஸ் படத்தில் கார்த்தி மிக அற்புதமாக நடித்துள்ளதாகவும் அவருக்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tag: jeeva, actor jeeva, madras, madras movie, madras movie online,

Share |
Previous Page Next Page HOME