விஜயசேதுபதியை நீக்கி சிம்புவை அழைத்துவந்த தனுஷ்?

தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அதில் கிருத்திகா உதயநிதியும் ஒருவர்.மிர்சி சிவாவை வைத்து இவர் இயக்கிய வணக்கம் சென்னைக்கு பிறகு,  தனுஷ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூட செய்தி வெளியாகின. ஆனால் அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிம்பு நடிக்க இருக்கிறாராம். ஆரம்பகாலங்களில் எலியும் பூனையாக மாறியிருந்த சிம்பு தனுஷ் இப்போது நகமும் சதையுமாக திரிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.அதனால் இந்த செய்தி ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் ஒருதரப்பு. அதோடு அப்படத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்த மைக்கேல் மதனகாமராஜன் படத்தைப் போல, நாலு கெட்டப்பில் நடிக்க போகிறாராம் சிம்பு. அவரிடம் உள்ள நடிப்பு திறமையை வெளிப்படுத்துமாறு உருவாக்கிவருகிறாராம் கிருத்திகா.


Tag: simbu, dhanush, vijayasethubathi,

Share |
Previous Page Next Page HOME