சமந்தாவுக்கு அக்காவாக மாறிய சினேகா

கதாநாயகிகள் மார்க்கெட் இழந்தாலோ அல்லது திருமணம் செய்து பின் நடிக்க வந்தாலோ அக்கா, அண்ணி கதாபாத்திரத்திற்கு வருவது இயல்பு தான். தமிழ் திரையுலகில் மட்டுமே இப்படி நடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

அவர் யார் என்று தெரிந்தால் அதிர்ச்சிதான் ஆவீர்கள் ’புன்னகை இளவரசி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் சினேகா தான். இவர் தற்போது தெலுங்கில் திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார், அவருக்கு அக்காவாக நடிக்க சினேகா சம்மதம் தெரிவித்துள்ளார்.


Tag: Sneha,sneha latest movie,sneha latest news, sneha latest stills,

Share |
Previous Page Next Page HOME