வெள்ளிக்கிழ்மை என்றாலே சினிமா பிரியர்களுக்கு ஒருவித சந்தோசம் இருக்கத்தான் செய்யும்.காரணம் அன்உ புதிய படங்களின் வெளியீடுதான். இதோ இன்று வெளியாகும் படங்கள்
1. மெட்ராஸ்
தொடர்ந்து தோல்வி படங்களை சந்தித்துவரும் கார்த்தி மிகவும் நம்பிகொண்டிருக்கும் படம் மெட்ராஸ். அவருடைய ஆஸ்தான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க, அட்டக்கத்தி வெற்றி படத்தை இயக்கிய பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நாயகியாக கேத்ரினா தெரஸா நடிக்க
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வட சென்னை இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதை தன்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடுக்க, எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து இப்படம் இன்று வெளியாகிறது. படம் கார்த்தியின் நம்பிக்கையை காப்பாற்றியதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2. ஜீவா
பாண்டியனாடு வெற்றிப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கி வெளிவர உள்ள படம் ஜீவா. முண்டாசுப்பட்டி வெற்றிக்குபின் விஷ்ணு நடிக்கும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பின் ஸ்ரீ திவ்யா நடித்து வெளிவரும் இரண்டாவது படம். நகைச்சுவைக்கு பரோட்டா சூரி. இசையை டி.இமான் அமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல எதிர்பார்ப்பில் வரும் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது விஷால்,ஆர்யாவின் வருகை. ஆம் இந்த படத்தை விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் தங்களது நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர்.இதனால் இந்த படத்திற்கும் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பதே உண்மை. பார்போம் இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்கிறதா என்று.
3.தலக்கோணம்
மிக நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த படம் இன்று வெளியாகிறது. எஸ்.ஜே.எஸ். இண்டர் நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும் படம் தலக்கோணம். இதில் நாயகனாக ஜிதேஷ், நாயகியாக ரியா நடிக்கின்றனர். கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, பெரோஸ்கான், நம்பிராஜ், சண்முகசுந்தரம், பாண்டு, காதல் அருண்குமார், நாராயணமூர்த்தி, டெலிபோன் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பத்மராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் விறுவிறுப்பான திகில், காட்சிகளுடன் அழுத்தமான காதலைச் சொல்லும் படம் என்று இயக்குநர் பத்மராஜ் கூறுகிறார்.

![]()