ஆயிரம்தான் சொல்லுங்க நயனை பிரிந்தபோது இருந்த பீலிங் ஹன்சிஹாவிடம் இல்லை: சிம்பு கூறுகிறார்

தமிழ் சினி உலகில் அறிவிக்கப்படாத காதல் மன்னனாக இருப்பவர் சிம்பு. காரணம் காதலுக்கும் அவருக்கும் அவ்வளவு தொடர்பு உண்டு.
தன் பழைய காதலியான நயன்தாராவிடம் ஜோடி சேர்ந்ததால் ஹன்சிகாவுக்கும் அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு அவர்களுடைய காதல் முறிவுக்கு வழிவகுத்தது ஆனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் மனம் திறந்த சிம்பு ‘என முதல் காதலியான நயன்தாராவை பிரிந்த போது இருந்த வலி, ஹன்சிகாவை பிரிந்த போது இல்லை என கூறியுள்ளார். அவர் மேலும் கூறியபோது, கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட காதல் முறிவு (நயன்தாராவுடன்) வருத்தத்தை கொடுத்தது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க நீண்ட காலம் ஆனது. ஆனால் ஹன்சிகாவுடன் ஏற்பட்ட பிரிவு எனக்கு மனஅழுத்தம் தரவில்லை. பிரிந்த முதல்நாளிலிருந்தே நான் வழக்கம்போலவே எனது பணிகளை செய்யத் தொடங்கிவிட்டேன். பிரிவை சந்திக்கும் பக்குவம் ஏற்பட்டதே காரணம். மீண்டும் காதல் வருமா என எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

Tag: simbu,simbu latest news,nayanthara with simbu news,hansika latest news,simbu nayanthara news,

Share |
Previous Page Next Page HOME