சதீஷ் நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்: கத்தி விழாவில் கூறிய சமந்தா

துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். காமெடி ரோலில் சதீஷ் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது,

ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போறாங்க என்ற ஆர்வமும். நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
அந்த சமயத்தில் முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே மும்பையில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸை பார்க்க வந்தேன்’ என்று கூறினார்.

சதீஷ் பேசும் போது, நான் சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதே விழாவில் பேசிய சமந்தா சதீஷிடம் நீ ஆசைப்படுவது போல் உன்னையே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று விழா மேடையில் சமந்தா நகைச்சுவையாக கூறியதும், விழா மேடை கலகலப்பானது.

Tag: kaththi audio launch Stills,samantha,samantha latest news, samantha hot stills,

Share |
Previous Page Next Page HOME