சென்ற வாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விசயம் அட்லீயின் காதல் தான். அட்லீக்கும் சின்னத்திரை நடிகை ப்ரியாவிற்கும் காதல் என பற்றவைக்க... அது உண்மைதாங்க என்று ஒரு ஸ்டில்லை இவர்களே நெட்டில் வெளியிட்டு பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இது குறித்து அட்லீ கூறுகையில், எனக்கு சிவகார்த்திகேயன் மிகவும் நெருங்கிய நண்பர், அவரை வைத்து தான் என் முதல் குறும்படமான முகப்புத்தக்கதை இயக்கினேன். இதன் பிறகு எங்கள் நட்பு அதிகமானது. அவரை பார்க்க அடிக்கடி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு செல்வேன், அங்கு தான் முதன் முதலாக ப்ரியாவை சந்தித்தேன். 'முகப்புத்தகம்’னு ஷார்ட் பிலிமோட பிரீமியர் ஷோவுக்கு பிரியா அவங்க குடும்பத்தோட வந்திருந்தாங்க. என் குடும்பத்துல உள்ளவங்களும் வந்ததால, ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். சொல்லபோனால் எங்கள் காதலுக்கு பிள்ளையார் சுழியே சிவகார்த்திகேயன் தான்.
அப்போதிலிருந்தே ப்ரியா மீது எனக்கு ஒரு லவ் இருந்தது, பின் ஒரு நாள் எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க என்று அவர் கூற, உடனே நான் என் போட்டோவை தரவா? என்று கேட்டேன். அவரும் வீட்டில் வந்து பேசுங்க என்று கூற பின் நடந்தது அனைத்தும் சுபமே.
என் காதலை முதலில் ஆர்யாவிடம் கூறிய போது யூ ஆர் வெரி லக்கி என்று வாழ்த்தினார். ஜெய்கிட்ட சொன்னப்போ, என்னது உனக்குக் கல்யாணமா? அப்படினு அதிர்ச்சியில் கேட்டார்.
ராஜா ராணி படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்திற்கு இன்ஸ்ப்ரேஷனே ப்ரியாதான் என்று அவர் கூறினார்.
Tag: sivakarthikeyan,atlee,priya, atlee marrage news, tanaa news,

![]()