காமிக் புக் films இந்தியா பிரைவேட் லிமிடெட்
வழங்கும்
சென்னை சிங்கப்பூர்
காமிக்
புக் films இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம் ,
சிங்கப்பூர் மீடியா ஆதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ' சென்னை
சிங்கப்பூர் ' என்ற தமிழ் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம்
சிங்கப்பூர் தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என
எதிர்பார்க்கபடுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரை
உலக திறமைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும் ' சென்னை சிங்கப்பூர்' அடுத்த
வருடதின் துவக்கத்தில் வெளி வரும் என எதிர்பார்க்க படுகிறது.
சென்னையை
சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கபுருக்கு வாய்ப்பு தேடி வருகிறான்.
அங்கே அவன் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க
நேரிடுகிறது.அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும் அதன் தொடர்ச்சியாக
ஏற்படும் சம்பவங்களும் ருசிகரமாக படமாக்க பட்டு உள்ளது.
'அமர
காவியம் ' மூலம் இளைஞர்களை குறிப்பாக இளம் பெண்களை பெரிய அளவில் கவர்ந்த
சத்யா இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர்
'திருமணம் எனும் நிக்கா' படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல். ஆந்திரா மெஸ்
என்ற படத்தில் அறிமுகமாகும் , திறமையான ஒளிபதிவாளர் என்று பரவலாக
பாராட்டப்படும் முகேஷ் ஒளிபதிவில் , தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளர் கே
எல் பிரவீன் படத்தொகுப்பில், வாகை சூடவா, திருமணம் எனும் நிக்கா, அமர
காவியம் ,
ரன்
ராஜா ரன் [ தெலுங்கு] என்றுதொடர்ச்சியாக தன்னுடைய செவிக்கினிய இசையால்
எல்லோரையும் கவர்ந்த ஜிப்ரான் ' சென்னை சிங்கப்பூர்' படத்துக்கும் இசை
அமைக்கிறார்.பல்வேறு ஆவன படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும்
அறிமுக இயக்குனர் கதை , திரை கதை , அமைத்து இயக்குகிறார்.
chennai singapore moive preview, chennai singapore moive review, chennai singapore moive stills, chennai singapore moive latest stills, சென்னை சிங்கப்பூர் விமா்சனம், சென்னை சிங்கப்பூர் படத்தின் ஸ்டில்ஸ், தமிழ் சினிமா செய்திகள், அமரகாவியம், அமரகாவியம் சத்யா, திருமணம் எனும் நிக்கா நடிகை ஹெப்பா படேல்
![]()



