கும்கி நாயகன் விக்ரம் பிரபு அரிமா நம்பி படத்தை அடுத்து, அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் படம் சிகரம் தொடு. இந்த படமானது டைரக்டா் கௌரவ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இவா் வேறு யாரும் இல்லங்க! அதாங்க, தூங்கா நகரம் திரைப்படத்தை இயக்கியவா் தாங்க!!!
சரி விஷயத்திற்க வருவோம். இந்த படத்தின் கதை கருவானது கொள்ளையா்கள் எப்படி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார்கள் என்பது தான். இதில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று இந்த கொள்ளையை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு கலக்கியுள்ளார்.
இந்த படமானது பிருத்விராஜ், ஜெய்சூர்யா, நரேன், பாவனா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ராபின்ஹுட் திரைப்படத்தை ஒட்டிம் இருக்கும்
என்று நமது தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகா் சத்யராஜ் நடித்துள்ளார். அவா் விக்ரம் பிரபுவின் தந்தையாக நடித்துள்ளார்.
விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால், நடிகா் அஜித் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசித்து, தன்னை தொலைபேசியில் அழைத்து, இந்த படமாது வெகுவாக வந்துள்ளது என பாராட்டியதாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
sigaram thodu first look saw the ajith wishes to vikram prabhu, vikram prabhu, vikram prabhu news, sigaram thodu movie stills, sigaram thodu review, sigaram thodu film latest stills, விக்ரம் பிரபு, சிகரம் தொடு, சிகரம் தொடு விமா்சனம், சிகரம் தொடு திரை விமா்சனம், தமிழ் சினிமா செய்திகள், அஜித் செய்தி, தல அஜித், ajith news, ajith wishes to vikram prabhu
![]()



