செல்பிபுள்ள பாடலில் கலக்கிட்டாரு: விஜயை பாராட்டிய அஜித்

துப்பாக்கி, தலைவா, ஜில்லா என தற்போது தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் தொடர்ந்து தன் சொந்த குரலில் பாடலை பாடி தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து அளித்து வருகிறார் விஜய்.அதிலும் அவர் பாடிய பாடல் நல்ல வரவேற்பையும் பெருகிறது.

துப்பாக்கியில் கூகுள் கூகுள், தலைவாவில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா மற்றும் ஜில்லாவில் கண்டாங்கி போன்ற பாடல்கள் உதாரணம்.

இந்நிலையில் சமீபத்தில் தான் தற்போது நடித்து கொண்டிருக்கும் கத்தி படத்திலும் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. திரையுலக பிரபலங்களையும் கவர்ந்து வரும் இந்த பாடலை அஜித்தும் கேட்டுள்ளார்.
பாடலை கேட்ட அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது. அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அனிருத்தும் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினாராம்.

Tag: vijay,ajith,kaththi news,kaththi songs,

Share |
Previous Page Next Page HOME