ஏ.ஆர்.ரகுமான் ராஜா; நான் மந்திரி- இளையராஜாவை சீண்டினாரா அனிருத்?



தமிழ் சினிமாவில் அதுவும் இசை உலகில் புது புது இசையமைப்பாளா் வலம் வந்து புதுமை படைத்து வருகின்றனா். அந்த வகையில் இளம் இசையமைப்பாளராக களம் இறங்கிய கலக்கி கொண்டிருப்பவா் அனிருத். தற்போது அவா் இசையமைத்த வரும் கத்தி படத்தின் பாடல்களும் பட்டைய கிளம்பி கொண்டிருக்கிறது.

சமீப காலங்களில் ஏதாவது சர்ச்சையில் பேசி மாட்டிக்கொள்வதை திரையுலகத்தில்சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அனிருத் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார். இசை உலகின் ஜாம்பவான் என்றால் அது நம்ம இன்னிசை தென்றல் இளையராஜா தாங்க!! அவரது இசைக்கு மயங்காதவா்களே இல்லை என்று சொல்லலாம்.  இசையமைப்பாளர் அனிருத் தன் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் சில நாட்களுக்கு முன் பேசினார்.இதில் ரசிகர் ஒருவர் உங்களை அடுத்த ரகுமான் என்று கூறலாமா? என்று கேட்டதற்கு ’ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ராஜா. நான் ஒரு மந்திரி மட்டுமே. அவரது இசையோடு என்னுடைய இசையை ஒப்பீடு செய்வது சரியல்ல.’ என்று கூறினார்.ஆனால் எல்லோருக்கும் தெரியும் இசையுலகின் ராஜா என்றால் அது இளையராஜா தான் என்று, ஆனால் அனிருத் இப்படி கூறியது ராஜா ரசிகர்கள் அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


tags: anirudh news, a.r.rahman news,

Share |
Previous Page Next Page HOME