நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் 'தலைவா' ஜோடி.

விஜய் அமலா பால் நடித்த தலைவா படத்தில் இடம்பெற்ற 'யார் இந்த சாலையோரம்' பாடல், உதயம் NH படத்தில் இடம்பெற்ற யாரோ இவன் பாடல் போன்ற ஹிட் பாடல்களை பாடிய ராசியான ஜோடியான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி மீண்டும் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளனர்.

'இதயம் உன்னை தேடுதே' என்ற மெலடி பாடலான இந்த பாடலை விஷால், லட்சுமி மேனன் ஜோடிக்காக ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி என்ற உண்மையான காதல் ஜோடி உருகி உருகி பாடியதை கேட்டு ஒலிப்பதிவு கூடமே மிக அமைதியாக இருந்ததாம். இந்த பாடலை கேட்ட தயாரிப்பாளரான தனஞ்செயன், சமீப காலத்தில் முதன்முறையாக கேட்டபோதே தன்னை அசத்திய பாடல் இது ஒன்றுதான் என்று புகழாரம் சூட்டுகின்றார்.

இதயம் உன்னை தேடுதே' என்று தொடங்கும் இந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். தனஞ்செயனின் UTV நிறுவனத்தின் படங்களுக்கு பெரும்பாலும் பாடல்கள் எழுதுவது நா.முத்துக்குமார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனாலும் இந்த பாடலை முத்துக்குமார் மிக அழகான வார்த்தைகளுடன் சேர்த்து எழுதியுள்ளாராம். இந்த பாடல் வெளிவந்த பின்னர்தான் தெரியும் இவர்களின் பில்டப் எந்த அளவுக்கு உண்மை என்று..

Share |
Previous Page Next Page HOME