திகில் படமாக உருவாகும் “சவரிக்காடு”

அன்னை தெரசா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “சவரிக்காடு”
கதாநாயகனாக மூன்று பேர்கள் ..ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகியோர்.

கதாநாயகிகளாக நடிப்பவர்கள் சுவாதி, ரேணு இருவரும். மற்றும் ரோபோ சங்கர், அல்வாவாச,சங்கர், அவன் இவன் ராமராஜன் ஆகியோருடன் சூரி நகைச்சுவை வேடத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்.

சண்முகராஜன் வன அதிகாரியாக திகிலூட்டும் விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோகுல்.கே

இசை – ஏ.இந்திரவர்மா

எடிட்டிங் – மாரீஸ்

கலை – எம்.ராஜாகண்ணதாசன்

பாடல்கள் – திருக்குமரன், தேவதேவன்

நடனம் – விஜயபாண்டி

தயாரிப்பு நிர்வாகம் ஆர். நாகராஜன்

ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா

கதை எழுதி தயாரித்து இயக்குகிறார் எம்.என். கிருஷ்ணகுமார்
படம் பற்றி இயக்குனர்…..

காடுகளுக்குள் மனதைக் கவரும் பசுமையும் இருக்கும் திகிலூட்டும், பயம் கொள்ள வைக்கும் விஷயங்களும் இருக்கும்.

இந்த சவரிக்காட்டில் இது இரண்டையும் கருவாக வைத்துக் கொண்டு நட்பையும், காமெடியையும் சேர்த்து பரபரப்பான படமாக்கி உள்ளேன் என்றார் இயக்குனர்.

Share |
Previous Page Next Page HOME