கமலுடன் லிப் கிஸ் காட்சியா? ஆண்ட்ரியா

விஸ்வரூபம் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார் நடித்திருப்பார். கமலுக்கு உதவியாளராகத்தான் ஆண்ட்ரிய நடித்திருப்பார். எனவே கமலுக்கும் ஆண்ட்ரியாவுக்கு எவ்வித ரொமான்ஸ் காட்சிகளும் முதல் பாகத்தில் இருக்காது. ஆனால் இரண்டாம் பாகத்தில் இருவருக்கும் பயங்கர ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், இருவருக்கும் லிப் கிஸ் காட்சி ஒன்று கிறங்கவைக்கும் வகையில் எடுக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது, விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சிகளை வெளியே விளக்கக்கூடாது என்று கமல் உத்தரவிட்டிருப்பதால் இதுபோன்ற கேள்விகளுக்கு தன்னால் பதில் கூற இயலாது என்றும் தெரிவித்த அவர் நாங்கள் படமாக்கிய காட்சிகளை விட பத்திரிகையாளர்களின் ஊகம் செய்த காட்சிகள்தான் அதிகமாக இருக்கிறது என்றார்.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை அடையும் என்றும் இரண்டாம் பாகத்தில் தனக்கு அதிககாட்சிகளை கமல் அளித்துள்ளார் என்றும் ஆண்ட்ரியா மேலும் கூறினார்.

விஸ்வரூபம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்றும் இதுகுறித்த முறையான அறிவிப்பை கமல் வரும் பொங்கல் தினத்தன்று வெளியிட இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Share |
Previous Page Next Page HOME