பிரியாமணியோட டாட்டூ செண்டிமெண்ட் பலிக்குமா?

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாங்காங் சென்ற நடிகை ப்ரியாமணி அங்கு வெகுவிமரிசையாக புத்தாண்டை கொண்டாடிவிட்டு தற்போது தாய்லாந்து சென்றுள்ளாராம். தாய்லாந்தில் அவர் தனது வலது கையில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளாராம். அதில் ‘Daddy’s Girl’ என்று எழுதப்பட்டுள்ளதாம்.

இந்த டாட்டூவுடன் உள்ள புகைப்படத்தை சமூக இணையதளங்களில் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் ப்ரியாமணி. இதேபோன்ற ஒரு டாட்டூவை சமீபத்தில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கையில் வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரியங்காவை டாட்டூவின் மட்டும் பின்பற்றும் ப்ரியாமணி, நடிப்பிலும் பின்பற்றுவாரா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

தற்போது சரத்குமாருடன் அஞ்சாதே சாண்டி என்ற படத்தில் நடித்து வரும் ப்ரியாமணி, இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றாராம். விஜயசாந்தி போல ஆக்ஷன் காட்சிகளில் மிகப்பிரமாதமாக நடித்துள்ளதாக கூறும் அவர்,இந்த படத்திற்கு பின்னர் தமிழ், மற்றும் தெலுங்கில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.  இந்த புதிய டாட்டூ தனக்கு செண்டிமெண்டாக நல்ல பலனை கொடுக்கும் என நம்புவதாகவும், 2014 ஆம் ஆண்டு தனக்கு ஒரு திருப்பமான ஆண்டாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Share |
Previous Page Next Page HOME