ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், அதற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் நடிக்கும் மூன்றாவது படத்தினைப் பற்றி அறிவித்துள்ளார்.
தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில், ஜெகதீஸ் இயக்கும் “ நண்பேன்டா” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளன.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நகைச்சுவையில் கலக்கிய சந்தானம் மற்றும் உதயநிதி கூட்டணி, இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலும் தொடர்கிறது. இவரது மூன்றாவது படமான நண்பேன்டா திரைப்படத்திலும் இக்கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சுந்தர பாண்டியன் திரைப்பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

![]()