2014ல் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ஜிகர்தண்டா: ஃபோர்ப்ஸ் இதழ்

2014 ஆம் ஆண்டில் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய ஐந்து திரைப்படங்களைப் பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. அப்பட்டியலில் பீட்சா
திரைப்படதின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சித்தார்த் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள ஜிகர்தண்டா திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது திரைப்படமாகும்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான பீட்சா திரைப்படம் வணிக ரீதியாகப் பெருவெற்றி பெற்றதுடன், மிகச் சிறந்த படமாகவும்
பாராட்டப்பெற்றது. பல்வேறு விருதுகளைப் பெற்றதுடன், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. இப்படம் விரைவில் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு உலகெங்கிலும் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீட்சா திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் படமென்பதால் ஏற்கெனவே ஜிகர்தண்டா திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் குவிந்திருந்தன.
தற்பொழுது போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ்ப்படமென்பதால் இப்படத்தைப் பற்றிய
எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியிருக்கின்றன.

Share |
Previous Page Next Page HOME