‘என் படத்தை விஜய் டிவிக்குத்தான் கொடுப்பேன்' சிக்கலில் துப்பாக்கி 2

ஐங்கரன் இண்டர்நேஷ்னல் லண்டன் கருணா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் துப்பாக்கி – 2 தான் விஜய்யின் அடுத்தப்படம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வரும்நிலையில் துப்பாக்கி – 2 படம் பற்றிய தகவல் ஒன்று நம் காதுக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸுக்கு 20 கோடி, விஜய்க்கு 18 கோடி என துப்பாக்கி – 2 படத்தில் இணையும் நடிகர், நடிகை, டெக்னீஷியன்களுக்கு மட்டுமே 50 கோடிக்குமேல் மொய் எழுதி, பிரம்மாண்டமான படமாக இந்தப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தின் பட்ஜெட் 75 கோடியை தாண்டுவதால், சாட்டிலைட் ரைட்ஸையும் பெரும் தொகைக்கு விற்க தீர்மானித்திருந்தார் தயாரிப்பாளர் லண்டன் கருணா. அவர் எதிர்பார்த்தபடி பெரும்தொகைக்கு துப்பாக்கி – 2 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிக்கொள்ள முன் வந்தது சன் டிவி மட்டுமே…! எனவே, பிசினஸ் பேசி முடிக்கப்பட்டு அக்ரிமெண்ட் போடவிருந்தநிலையில், இந்த விஷயத்தை இயக்குநர் என்ற முறையில் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர்.

அதைக் கேட்டதும், ‘என்னைக் கேட்காமல் சன் டிவிக்கு ஏன் ரைட்ஸ் விற்றீர்கள்?’ என்று டென்ஷனாகிவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அதோடு, இந்தப்படத்தையும் விஜய் டிவிக்குத்தான் கொடுக்கணும்’ என்று சொல்கிறாராம். முருகதாஸ் முரண்டு பிடிப்பதை சட்டைபண்ணாமல், ‘ஏற்கனவே சொன்னபடி துப்பாக்கி – 2 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டி.வி.க்குத்தான் கொடுப்பேன்’ என்று கண்டிப்புடன் சொல்கிறாராம் லண்டன் கருணா.

Share |
Previous Page Next Page HOME