விஜய், அஜீத்துடன் மோதப்போகும் ஜாக்கி சான்?!

ஜாக்சி சானின் ‘போலிஸ் ஸ்டோரி 2013’ படத்தை பொங்கலுக்குத் தமிழகமெங்கும் சுமார் 200 திரை அரங்குகளில் வெளியிடுகிறார்கள். பொங்கலுக்கு விஜய், அஜீத் படங்கள் வருகிறது என்ற அச்சத்தில் பல தமிழ்ப் படங்களே விலகி நிற்கும் நிலையில், ஜாக்கி சான், ‘மிஷின் கன்’னோடு மிரட்டலாக பொங் கலுக்குக் களமிறங்குகிறார்.

ஏற்கெனவே அவரது ‘போலிஸ் ஸ்டோரி’ அதிரடி மிரட்டல் என்பதால், அந்தப் படத்தின் 2ம் பாகமான ‘போலிஸ் ஸ்டோரி 2013’ படத்தில் இன்னும் அதிரடியான சண்டைக் காட்சிகளை வைத்து, படத்தை 3டியில் வெளியிடு கிறார்களாம். இந்தப் படத்தில் ஜாக்கி சான் முதன்முறையாக ஒரு பாட்டும் பாடியிருக்கிறார்.

Share |
Previous Page Next Page HOME