ஜெயம் ரவி ஹாக்கி வீரராக நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கராத்தே வீராங்கனையாக நடிக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக கராத்தே பள்ளிக்கு சென்று தினமும் இரண்டு மணிநேரம் கராத்தே பயின்று வருகிறார் நயன் தாரா. இவருக்கு கராத்தே சொல்லிக்கொடுக்கும் பள்ளியில் உதவி கராத்தே மாஸ்டர் ஒருவர் நயன்தாராவிடம் சில்மிஷம் செய்ய முயன்றதால் தலைமை கராத்தே மாஸ்டர் சில்மிஷம் செய்த நபரை டிஸ்மிஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பில்லா படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்த நயன் தாரா, பின்னர் மென்மையான காதல் வேடங்கள் ஏற்று நடித்தார். கஹானி படத்தில் கர்ப்பிணியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் திடீரென மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் நயன்தாரா. ஜெயம் ராஜா இயக்கும் இந்த படத்தில் கராத்தே சண்டை போட்டு வில்லன்களை அடித்து நொறுக்குகிறார். முறைப்படி கராத்தே பயிற்சி பெற்று சண்டைக்காட்சிகளில் நயன் தாரா நடிப்பதால், காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.
கராத்தே பயிற்சி பெறுவதற்காக சென்னையில் உள்ள ஒரு கராத்தே பயிற்சி நிலையைத்திற்கு சென்றபோது தனக்கு நேர்ந்த கசப்பான மேற்படி சம்பவத்தை இயக்குனரிடம் நயன்தாரா பகிர்ந்துகொண்டாராம். தற்போது இயக்குனர் ஜெயம் ராஜா தனக்கு தெரிந்த ஒரு கராத்தே மாஸ்டரை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து நயன்தாரவுக்கு பயிற்சி கொடுத்து வருகிறாராம்.

![]()