என்னை கலாய்ப்பதே இந்த பத்திரிக்கையாளர்களுக்கு வேலையாப்போச்சு

சென்னை 28ல் தொடங்கி இன்று பிரியாணி வரை நல்ல பொழுதுபோக்கு படங்களை அளித்துள்ள வெங்கட்பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியின் போது பேசிய வெங்கட்பிரபு “தன்னை பத்திரிகை நண்பர்கள் என்றும் வாழ்த்துவதும், அவ்வப்போது திட்டுவதும் உண்டு. என்னை பற்றி கலாய்த்தும் சில விமர்சனங்களை பத்திரிகை நண்பர்கள் எழுதி உள்ளனர். ஆனால் மக்களும் அதைதான் விரும்புவதாக நம்புகிறேன். இந்த 6 வருடங்களாக எனது வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த பத்திரிகை நண்பர்கள் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Share |
Previous Page Next Page HOME